'ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்கும் ரோகித் சர்மா?’... ‘பிசிசிஐ தலைவர் கங்குலியின் சூசக பதில்’... ‘எதிர்பாராமல் வந்த திடீர் திருப்பம்’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுரோகித் சர்மாவை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் சேர்க்காமல் பிசிசிஐ இழுத்தடித்து வந்தநிலையில், தற்போது அவரை இந்திய அணியில் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் தொடர் நவம்பர் 27 அன்று துவங்க உள்ளது. அதை அடுத்து டி20 தொடர் மற்றும் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. ஜனவரி இரண்டாம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த மூன்று தொடர்களுக்கான இந்திய அணியிலும் ரோகித் சர்மா இடம் பெறவில்லை. அவருக்கு ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட தசைப்பிடிப்பை காரணமாகக் காட்டி அவர் அணியில் இருந்து ஒட்டுமொத்தமாக நீக்கப்பட்டார். இந்த தகவல அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், சர்ச்சைக்கும் வித்திட்டது.
பிசிசிஐ-க்கும் பததிலடி கொடுக்கும் வகையிலும், சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் ரோகித் சர்மா, ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் பங்கேற்று ஆடினார், தான் முழு உடற்தகுதியுடன் இருப்பதை உறுதி செய்தார். பிளே-ஆஃப் சுற்றிலும் பங்கேற்ற அவர், இறுதிப் போட்டியிலும் ஆட உள்ளார்.
இதை அடுத்து ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ரோகித் சர்மாவை சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது பிசிசிஐ. அவர் நவம்பர் 11 அன்று கிளம்ப உள்ள இந்திய அணியுடன் கடைசி நேரத்தில் சேர்க்கப்படுவார் என கூறப்படுகிறது. ஆனாலும், அதில் ஒரு சிக்கல் உள்ளது. பிசிசிஐ அவரது உடற்தகுதியை சோதிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஆடிய போட்டிகள் மட்டுமின்றி, இறுதிப் போட்டியிலும் அவர் முழு உடற்தகுதியுடன் இருக்கிறாரா என சோதித்த பின்னரே அவரை போட்டிகளில் பங்கேற்க வைப்பது பற்றி முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.
மேலும் இந்திய கேப்டன் விராட் கோலி பாதி டெஸ்ட் தொடரில் விலகுவார் என ஒரு தகவல் வலம் வருகிறது. இந்த தொடருக்கு ராகுலை கேப்டனாக நியமிக்க முடியாது என்பதால், ஆஸ்திரேலியா போன்ற பெரிய அணிக்கு எதிராக ராகுலை கேப்டனாக அனுப்ப முடியாது. இதனால் ரோகித் சர்மாவை அழைக்கலாம் என்று பிசிசிஐ கருதுகிறது. அதாவது ரோகித்தை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்து டெஸ்ட் தொடரின் கேப்டனாக நியமிக்கலாம் என்று பிசிசிஐ கருதுகிறது. இதை கங்குலியும் கூட சூசகமாக தெரிவித்து இருந்தார்.
விராட் கோலி விலகினால், அந்த நேரத்தில் இந்திய அணியில் பேட்டிங் பலவீனமடைய வாய்ப்பு உள்ளது. அப்போது மற்ற முக்கிய வீரர்கள் அனைவரும் அணியில் இருப்பது அவசியம். எனவே, ரோகித் சர்மா நிச்சயம் டெஸ்ட் தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் உடல்நிலை காரணம் காட்டி, ஒருநாள் தொடரில் மட்டும் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படும்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘முன்னாடியே’ சொல்லிட்டாரு.. 2 டெஸ்ட் மேட்ச் முடிஞ்சதும் இந்தியா திரும்பும் கோலி?.. பிசிசிஐ முக்கிய அதிகாரி சொன்ன தகவல்..!
- தப்பி தவறிக்கூட கோலி கிட்ட ‘அத’ பண்ணிராதீங்க.. ‘எச்சரிக்கை’ செய்த முன்னாள் கேப்டன்..!
- "அவங்க ரெண்டு பேர் கூட... இவர கம்பேர் பண்ணாதீங்க... வேற டீமா இருந்திருந்தா இந்நேரம்"... 'வெளுத்து வாங்கிய கம்பீர்!!!'...
- கொஞ்ச நஞ்ச பேச்சாடா பேசுனீங்க..! எங்களுக்கே ‘புடி புடி’யா.. நேரம் பார்த்து ஆர்சிபியை வச்சு செஞ்ச சிஎஸ்கே..!
- VIDEO: 'சும்மா இருந்த சங்கு... அத ஊதி கெடுத்த மாதிரி'... ஏங்க இப்படி?.. கடைசில வாங்குன 'பல்பு' தான் ஹைலைட்!.. கோலி மீது அடுத்தடுத்து பாயும் புகார்கள்!
- "அந்த ஒன்ன மட்டும் பண்ணியிருந்தோம்... போட்டியவே புரட்டிப் போட்டிருக்கலாம்!"... 'தோல்விக்குப்பின் புலம்பிய கோலி!!!'...
- 'அவ்ளோ கத்தியும் தப்பிச்ச கேப்டனால்'... 'மிஸ்ஸான பழிதீர்க்கும் பிளான்?!!'... 'போட்டிக்கு நடுவே பரபரப்பை எகிற வைத்த சம்பவம்!!!'...
- 'நல்ல ப்ளேயர்ஸ் இருந்து என்ன யூஸ்?.. இதுவரைக்கும் ஒரு தடவ கூட கப் ஜெயிக்கல!'.. '13 வருஷமா... 'ஆர்சிபி'க்கு என்ன தான் சிக்கல்?'.. 'இந்த' இடத்துல தான் சொதப்புறாங்க!
- 'இந்த சந்தோஷத்துலதான் நேத்து ஸ்டம்ப் அப்படி பறந்துதா?!!'... 'கேப்டன் பகிர்ந்த ஹேப்பி நியூஸ்!!!... 'வாழ்த்து மழையில் தமிழக வீரர்!'...
- "இதுக்குபோய் எப்படி Out குடுக்கலாம்???... அதுலதான் அவங்க தடுமாறிட்டாங்க"... 'வெடித்த அடுத்த பெரும் சர்ச்சையால் ரசிகர்கள் கொந்தளிப்பு!'...