'இதெல்லாம் எவ்ளோ பெரிய கேவலம் தெரியுமா'?.. ஜடேஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதி!.. பிசிசிஐ முடிவுக்கு கிரிக்கெட் ஜாம்பவான்கள் கடும் எதிர்ப்பு!.. என்ன நடக்கிறது?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆல்ரவுண்டர் ஜடேஜா விஷயத்தில் பிசிசிஐ எடுத்துள்ள முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சர்வதேச ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக பங்கேற்கும் வீரர்களின் ஒப்பந்தம் மற்றும் ஊதிய விவரங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இதில் ஜடேஜாவுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள பிரிவு ரசிகர்களுக்கும், முன்னாள் வீரர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 2020 முதல் செப்டம்பர் 2021 வரையிலான நடப்பு ஆண்டிற்கான ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில், ஏ+ பிரிவில் இடம்பெறும் வீரருக்கு ரூ.7 கோடியும், ஏ பிரிவிற்கு ரூ.5 கோடியும், பி மற்றும் சி பிரிவு வீரர்களுக்கு தலா ரூ.3 மற்றும் ரூ.4 கோடியும் ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்த ஆண்டு ஏ+ பிரிவில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ஜஸ்பரீத் பும்ரா மட்டுமே இடம்பெற்றுள்ளனர். ரவீந்திர ஜடேஜாவின் பெயர் இடம்பெறவில்லை. ஏ+ பிரிவில் தேர்வாகும் வீரர்கள் டெஸ்ட், ஒருநாள், டி20 போன்ற மூன்று பிரிவுகளிலும் தொடர்ந்து இடம்பெறவேண்டும் என்பதுதான் விதியாகும். ஜடேஜா கடந்த ஆண்டில் மூன்றுவகை கிரிக்கெட்டிலும் தொடர்ந்து இடம்பெற்று வந்தார். இங்கிலாந்து தொடரில் மட்டும் காயம் காரணமாக வெளியேறினார்.
இந்நிலையில், இதுகுறித்து ட்வீட் செய்துள்ள இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன், "ஜடேஜாவுக்கு ஏ+ பிரிவில் இடம் வழங்காதது அவமானம. அவர் விராட் கோலியுடன் ஏ+ பிரிவில்தான் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
அவரைப் போலவே இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியுன் முன்னாள் தேர்வாளர் எம்.எஸ்.கே பிரசாத், "ஜடேஜா ஏ+ பிரிவுக்கு தகுதியானவர். அவரின் பெயர் அந்த பிரிவில் இடம் பெறாமல் இருக்க ஒரு காரணமும் எனக்கு தெரியவில்லை" என கூறியுள்ளார்.
சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளார். அதேபோல, டெஸ்ட் போட்டிகளுக்கான ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் 3ம் இடத்தை பிடித்துள்ளார். ஆனால் அவர் ஏ+ பிரிவில் சேர்க்கப்படாதது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அவரு ப்ரீ பெயிட் சிம் கார்ட் மாதிரி!.. இவங்க போஸ்ட் பெயிட் சிம் கார்ட் மாதிரி'!.. இந்திய அணி வீரர்களை கிழித்து தொங்கவிட்ட முன்னாள் வீரர்!.. ஏன் இப்படி?
- 'இது' தான் உண்மை!.. டாப் ஆர்டர் விக்கெட்டுகளை... வேட்டையாடியது 'இப்படி' தான்!.. சஹார் பவுலிங்-ஐ decode செய்த ரவி சாஸ்திரி!.. வெளியான வாவ் தகவல்!
- 'தோனி மனசு மாறிடப்போகுது!.. இப்படியா ஆடுவீங்க'?.. ரசிகர்களை வெறுப்பேற்றிய சிஎஸ்கே வீரர்!.. சென்னை அணியில் விரைவில் மாற்றம்!?
- ஒரே ஒரு தமிழன்!.. பஞ்சாப் அணிக்காக... ஒட்டுமொத்த சிஎஸ்கேவையும் திணறடிச்சு... தனியாளாக கெத்து காட்டியது எப்படி?.. தெறி பின்னணி!
- 'படு பயங்கர ஸ்கெட்ச்!.. பின்ன, பவர் ப்ளேல 4 விக்கெட்னா சும்மாவா'!?. பஞ்சாப் கிங்ஸ் டாப் ஆர்டருக்கு வேட்டு வைத்த... சாஹரின் வியூகம் 'இது' தான்!
- 'அவர் டெல்லி அணியின் முக்கிய பவுலர்!.. காயம் காரணமா 'இந்த' சின்ன பையனுக்கு வாய்ப்பு கொடுத்தோம்!'.. 'ஆனா இப்போ'... பாண்டிங்-ஐ மிரளவைத்த இளம் வீரர்!!
- 'கைவிரலில் ஏற்பட்ட காயம்...' சிடி ஸ்கேன் எடுத்தபோது தெரிய வந்த 'அதிர்ச்சி' ரிப்போர்ட்...! - கன்ஃபார்ம் ஆன உடனே பென் ஸ்டோக்ஸ் எடுத்துள்ள முடிவு...!
- 'பவுலிங்ல குறையா?.. யார் சொன்னது?.. நாங்க தோத்ததுக்கு காரணமே வேற'!.. களத்தில் நடந்ததை பொதுவெளியில் உடைத்த பண்ட்!
- ‘5 வருசத்துக்கு முன்னாடி பார்த்த தோனியே இல்ல இது’!.. ‘ஒரு கேப்டனா அவர் இதை செஞ்சே ஆகணும்’.. கம்பீர் சொன்ன அட்வைஸ்..!
- 'கேலி... கிண்டல்... புறக்கணிப்பு'!.. அவமானங்கள் அனைத்தையும்... ஒரே மேட்ச்சில் அடித்து நொறுக்கிய உனட்கட்!.. ப்பா!.. பின்னணியில் 'இப்படி' ஒரு காரணமா?