5 வருசத்துக்கு ரூ.40,000 கோடியா? IPL ஒளிபரப்பு உரிமை யாருக்கு? கடும் போட்டியில் 4 முன்னணி நிறுவனங்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2023-27 ஆம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்புக்கான ஊடக உரிமைகளை மின்-ஏலத்தின் மூலம் விற்க முடிவு செய்துள்ளது.

Advertising
>
Advertising

தளபதி கம்பீர் Vs தல தோனி.. ஐபிஎல் மெகா ஏலம்.. மல்லுக்கட்ட போகும் பெரிய தலைகள்??.. பின்னணி என்ன?

இது தொடர்பான ஏலம் மார்ச் மாத இறுதிக்குள் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. "டெண்டருக்கான (ITT) அழைப்பிதழ் பிப்ரவரி 10-ஆம் தேதிக்குள் வெளியாகும் என்றும், அதன் பின்னர் 45 நாட்களுக்குப் பிறகு மின்-ஏலத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடப்பு 2018-22 ஆண்டுக்கான ஐபிஎல்லின் ஊடக ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் இந்தியா நிறுவனம் ₹16,347.5 கோடிக்கு வாங்கியது. அதற்கு முன், சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் நிறுவனம் 10 ஆண்டுகளுக்கு ஊடக உரிமையை வைத்திருந்தது, அதற்காக அந்த நிறுவனம் ₹8,200 கோடி ரூபாயை பிசிசிஐ- க்கு செலுத்தியது.

ஐபிஎல் சந்தேகத்திற்கு இடமின்றி பிசிசிஐக்கு மிகவும் இலாபகரமான சொத்து. சமீபத்திய அணி ஏலத்தில் செய்தது போல் மின்-ஏலத்தில் நடத்துவதா  அல்லது மூடிய உறை ஏலத்தில் நடத்துவதா என ஒரு விவாதம் இருந்தததாகவும், ஆனால் இறுதியாக பிசிசிஐ, மிகவும் வெளிப்படையானது என்பதால் மின்-ஏலத்திற்கு செல்ல முடிவு செய்தது என்றும் கூறப்படுகிறது.

குறைந்தது மூன்று ஒளிபரப்பாளர்கள் ஏலத்தில் ஆர்வம் காட்டுவதால், இந்த முறை  ₹32,000 கோடியை விட ஏலத்தொகை அதிகமாக இருக்கும் என்றும், லீக்கில் இரண்டு புதிய அணிகளைச் சேர்ப்பதன் மூலம், ஐபிஎல் போட்டிகளின் எண்ணிக்கை 74-போட்டியாக அதிகரிக்கும். 2023ல் நடக்கும் போட்டிகள், 2024 மற்றும் 2025ல் படிப்படியாக 84 போட்டிகளாக அதிகரிக்கப்படும், மேலும் 2026-27 ஆண்டுகளில் தலா 94 போட்டிகள் நடைபெறும்.

ஸ்டார், டிஸ்னி, சோனி, அம்பானியின் வயாகாம்18 மற்றும் அமேசான் உட்பட இந்தியாவில் உள்ள பெரிய ஒளிபரப்பு நிறுவனங்கள் மற்றும் பிரபல OTT நிறுவனங்களும் இந்த ஏலத்தில் போட்டியிடுகின்றனர். பிசிசிஐ இப்போது 35,000 முதல் 40,000 கோடி வரை ஏலத்தை எதிர்பார்க்கிறது, இது கடந்த கால உரிமைகளின் கடைசி மதிப்பில் கிட்டத்தட்ட 150% ஆகும்.

அமேசான் இப்போது நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் உரிமைகளுடன் கிரிக்கெட்-ஸ்ட்ரீமிங் துறையில் நுழைந்துள்ளது.  அமேசான், கிரிக்கெட் ஸ்ட்ரீமிங் சேவைகளை இந்த ஆண்டு 2022 ஜனவரியில் நியூசிலாந்து வங்காளதேச சுற்றுப்பயணத்துடன் தொடங்கியது. இப்போது  உலகின் முன்னணி ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் வரவிருக்கும் ஐபிஎல் உரிமைக்கான டெண்டரில் முக்கிய பங்கு வகிக்க வாய்ப்புள்ளது.

IPL Auction 2022: இவங்க 10 பேரை எடுக்க தான் கடும் போட்டி நடக்கபோகுது பாருங்க.. லிஸ்ட்டை வெளியிட்ட பிசிசிஐ..!

BCCI, IPL MATCH, OTT TELECAST, இந்திய கிரிக்கெட், பிசிசிஐ, ஐபிஎல்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்