'என்ன இவ்வளவு ரூல்ஸ்-ஆ'?.. 'ஐபிஎல் மாதிரி சொதப்பிட்டா... நம்ம கௌரவம் என்ன ஆகுறது'?.. வீரர்களிடம் கரார் காட்டிய பிசிசிஐ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகாக இங்கிலாந்து செல்லும் இந்திய அணிக்கு நீண்ட குவராண்டைன் திட்டத்தை வகுத்துள்ளது பிசிசிஐ.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. 

இங்கிலாந்தின் ஹாம்ப்சைர் மைதானத்தில் வரும் ஜூன் 18ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெற்றுள்ளது. அதன் பிறகு இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி ஆடுகிறது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அவர்களின் பயணத்திட்டம் வெளியாகியுள்ளது. இந்திய வீரர்கள் அனைவரும் இந்தியாவில் 8 நாட்களும், இங்கிலாந்தில் 10 நாட்கள் என மொத்தம் 18 நாட்கள் குவாரண்டைனில் வைக்கப்படவுள்ளனர். 

வரும் மே 25ம் தேதிக்குள் இந்திய வீரர்கள் அனைவரும் பிசிசிஐ-ன் பபுளுக்குள் வந்துவிடுவார்கள். ஜூன் 2ம் தேதி வரை இந்த பபுளில் இருக்கும் அவர்கள், பின்னர் தனி விமானம் மூலம் இங்கிலாந்து சென்று அங்கு ஜூன் 12ம் தேதி வரை அந்நாட்டின் பபுளில் தங்கவைக்கப்படவுள்ளனர். 

ஜூன் 22ம் தேதி நியூசிலாந்துடனான போட்டி முடிவைடையும் நிலையில், இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கி செப்டம்பர் 14வரை நடைபெறுகிறது. எனவே, 3 மாத கால நீண்ட சுற்றுப்பயணம் என்பதால் வீரர்கள் தங்களது குடும்பத்தினரையும் உடன் அழைத்து வரலாம் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் முதற்கட்ட கொரோனா தடுப்பூசிகளை இந்திய வீரர்கள் போட்டு வருகின்றனர். இந்நிலையில் 2ம் கட்ட தடுப்பூசி இங்கிலாந்தில் போட்டுக்கொள்ள பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஒருவேளை இங்கிலாந்து வாரியம் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் இந்தியாவில் இருந்தே தடுப்பூசிகள் எடுத்துச்செல்லப்படும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்