'ஐபிஎல் முக்கியம் தான்... அதுக்காக இப்படியா'!?.. சர்வதேச தொடரை... ரத்து செய்யும் அளவுக்கு பிசிசிஐ தீவிரம்!.. ஐசிசி செம்ம ஷாக்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்குவதால், தென்னாப்பிரிக்கா உடனான டி20 தொடரை பிசிசிஐ ரத்து செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் நடந்து வந்த ஐபிஎல் 2021 தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் வருண் சக்கரவர்த்திக்கு முதன் முதலாக கொரோனா தொற்று ஏற்பட, பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகிகளுக்கு கொரோனா உறுதியானது. பிறகு, சன்ரைசர்ஸ் வீரர் சாஹா, கொல்கத்தா அணி வீரர்கள் என்று கொரோனா அடுத்தடுத்து பரவ மறுதேதி குறிப்பிடாமல் ஐபிஎல் தொடரை ஒத்திவைத்தது பிசிசிஐ. அதில், இன்னும் 31 ஆட்டங்கள் மீதமுள்ளன.  

இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகள் மீண்டும் செப்டம்பர் 19 அல்லது செப்டம்பர் 20ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் என்றும், அக்டோபர் 10ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என்றும் ஸ்போர்ட்ஸ் டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த 31 போட்டிகளில், 10 போட்டிகள் double headers-ஆக, அதாவது ஒரே நாளில் இரண்டு போட்டிகளாக நடத்தப்பட உள்ளது. அதேபோல் 7 single headers-ஆகவும், 4 பிளே-ஆஃப் போட்டிகள் என 31 போட்டிகளும் 21 நாளில் நடத்தி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும், தலைமை செயல் அதிகாரிகளும் உறுதிப்படுத்தி உள்ளதாகவும், பிசிசிஐ அதிகாரிகள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் தெரிவித்ததாகவும் விளையாட்டு பத்திரிகையாளர் போரியா மஜூம்தார் ஸ்போர்ட்ஸ் டுடே யூடியூப் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். இதனால், ஐபிஎல் ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டிங்கில் உள்ளது. 

இந்த சூழலில், செப்டம்பர் மாதம் தென்னாப்ரிக்காவுக்கு எதிராக நடைபெறவிருந்த டி20 தொடரை பிசிசிஐ ரத்து செய்துள்ளதாக தெரிகிறது. உலகக் கோப்பை டி20 தொடருக்கு தயாராகும் விதமாக தென் ஆப்ரிக்கா தொடர் முடிவு செய்யப்பட்டது என்றாலும், இப்போது ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதால், அதை விட, டி20 உலகக் கோப்பைக்கு கடுமையான பயிற்சி களம் இருக்க முடியாது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

அதுமட்டுமின்றி, அடுத்த வருடத்தின் தொடக்கத்தில், தென்னாப்ரிக்காவுக்கு இந்தியா சுற்றுப்பயணம் செய்யும் போது, ரத்து செய்யப்பட்ட இந்த போட்டிகளை சமன் செய்யும் விதமாக, கூடுதலாக இந்திய அணி போட்டிகளில் விளையாடும் என்று பிசிசிஐ தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்