இவரா...? இல்ல அவரா? டி20 மேட்ச்க்கு ஓகே! டெஸ்ட்-க்கு யாருப்பா கேப்டன்..?- பெரும் குழப்பத்தில் பிசிசிஐ…!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி20 போட்டிகளுக்கான கேப்டனாக கோலி விலகிய பின்னர் ரோகித் சர்மா கேப்டன் ஆக அடுத்து வரும் நியூசிலாந்து தொடரில் விளையாட உள்ளார். டி20-க்கான கேப்டன் தேர்வு முடிந்துவிட்டாலும் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனைத் தேர்ந்தெடுப்பதில் தற்போது பிசிசிஐ பெரும் குழப்பத்தில் இருக்கிறதாம்.

Advertising
>
Advertising

பணிச்சுமை கருதி சில முக்கிய வீரர்களுக்கு வருகிற நியூசிலாந்து டெஸ்ட் தொடர் போட்டிகளில் ஓய்வு அளிக்கலாம் என பிசிசிஐ கருதி உள்ளது. இதனால் பும்ரா, ஷமி, ஷர்துல், பண்ட் ஆகியோருக்கு நியூசிலாந்து டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு அளிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த உறுதியான தகவல்கள் நிறைந்த இந்திய அணி பட்டியல் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாக வாய்ப்பு உள்ளது. இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட் சீரிஸ்களில் விளையாட உள்ளது. முதலாவதாக கான்பூரில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் கோலி விளையாடமாட்டார். ஆனால், மும்பையில் நடைபெற உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கோலி இணைந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் இந்திய அணி டிசம்பர் இரண்டாம் வாரம் முதல் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தைத் தொடங்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த முதல் கான்பூர் டெஸ்ட் போட்டிக்குத்தான் தற்போது கேப்டன் ஆக யாரை நியமிக்கலாம் என்ற குழப்பத்தில் இருக்கிறதாம் பிசிசிஐ. ரோகித் சர்மா அல்லது அஜிங்கியா ரஹானே ஆகிய இருவருக்கும் இடையே தான் கேப்டனுக்காக யாரை நியமிப்பது என்ற குழப்பம் நிலவுகிறதாம். இருவரும் கேப்டன் பதவிக்கு ஏற்ற அத்தனைத் தகுதிகளையும் கொண்டிருப்பதால் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறாராம்.

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் ஆக விராட் கோலி தான் தொடருவார். ஆனால், கான்பூர் போட்டிக்காக மட்டுமே தற்போது கேப்டன் யார் என்ற குழப்பம் உள்ளது. நவம்பர் 17-ம் தேதி முதல் ஜெய்பூரில் தொடங்க உள்ள நியூசிலாந்துக்கு எதிரான டி20 சீரிஸ் போட்டிகள் தொடங்கும் முன்னர் இந்திய அணி வீரர்களுக்குத் தங்களது பயோ- பபிள் வாழ்வில் இருந்து இரண்டு நாட்கள் ஓய்வு அறிவித்துள்ளது பிசிசிஐ. இதனால் இந்திய வீரர்கள் தங்களது குடும்பத்துடன் நேரம் செலவிட முடியும் என நம்புவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

தற்போது புதிதாக இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பு ஏற்றுள்ளதால் அவருடைய பயிற்சியாளர்கள், உதவியார்கள் கொண்ட அணி விவரம் இன்னும் இரண்டொரு நாட்களில் வெளியிடப்படும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

BCCI, ROHIT SHARMA, AJINKYA RAHANE, NEWZEALAND TEST SERIES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்