‘முக்கிய வீரருக்கு விசா மறுக்க கூறப்பட்ட காரணம்..’ களத்தில் இறங்கிய பிசிசிஐ..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக் கோப்பையைத் தொடர்ந்து இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாட உள்ளது.
இந்தத் தொடரின் முதல் 2 டி20 போட்டிகள் அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற இருக்கிறது. இதற்காக நாளை மறுநாள் அமெரிக்கா புறப்படும் இந்திய அணியுடன் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிக்குத் தேர்வாகியுள்ள வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும் செல்ல இருக்கிறார். இந்நிலையில் அமெரிக்க தூதரகத்தில் விண்ணப்பித்த போது ஷமிக்கு விசா வழங்க அவர்கள் மறுத்துள்ளனர்.
முகமது ஷமி மீது அவரது மனைவி தொடர்ந்த வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதே இதற்கு காரணமாகக் கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பிசிசிஐ அமெரிக்க தூதரகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் முகமது ஷமி இந்தியாவிற்காக படைத்துள்ள சாதனைகள் மற்றும் அவர் மீது நிலுவையில் உள்ள வழக்கு குறித்து பிசிசிஐ விளக்கியுள்ளது. அதை ஏற்று தற்போது ஷமிக்கு விசா வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு முகமது ஷமிக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட பிரச்சனையில், ஷமி தன்னைக் கொடுமைப்படுத்துவதாக அவர் மனைவி புகார் அளித்துள்ளார். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இந்திய அணி பற்றிய பொறுப்பற்ற பேச்சால்..’ பதவியை இழக்கும் முன்னாள் வீரர்..
- ‘என்ன நடக்கிறது அணியில்..?’ இந்திய வீரரின் செயலால் வலுக்கும் சந்தேகம்..
- ‘நான் அப்டி சொல்லவே இல்லயே’... ‘அந்தர் பல்டி’ அடித்த பிரபல வீரரின் 'தந்தை'!
- இந்திய அணி பற்றி கிண்டலாக ட்வீட் செய்த பிரபல வீரர்.. ‘கலாய்த்தெடுத்த இந்திய ரசிகர்கள்..’
- ‘பல பெண்களுடன் பேசிய சாட்டிங் லீக்'... 'சர்ச்சையில் சிக்கிய பிரபல இளம் வீரர்'!
- 'வா தல.. வா தல'.. அதே எனர்ஜி.. அப்டியே போறோம்.. விண்டீஸ தட்டி.. தூக்குறோம்.. வைரல் வீடியோ!
- 'நா வந்துட்டேன்னு சொல்லு'.. 'நானா விளையாடுறேன்.. தானா விளையாடுது கை'.. வைரல் வீடியோ!
- ‘உலக சாம்பியனுக்கு காத்திருந்த அதிர்ச்சி’... '85 ரன்னில் சுருண்ட பரிதாபம்'!
- ‘எல்லாரையும் திருப்திபடுத்தறது உங்க வேல இல்ல..’ இந்திய அணி குறித்து பிரபல வீரர் காட்டம்..
- ‘இதுல நானும் தோனி மாதிரிதான் இருப்பேன்’.. நச்சுனு பதிலளித்த கோலி..!