‘ஸ்மித், வார்னர், டிம் பெய்ன் இருந்தும்.. டெஸ்ட் மேட்சையே ஒன் டே மேட்சா மாத்திட்டீயே பங்கு!’.. மிரட்டிய ரிஷப் பந்த்.. சந்தோஷத்தில் கங்குலியின் ‘அதிரடி’ அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி மிரட்டி வருகிறது. சிட்னியில் தோற்கவிருந்த 3வது டெஸ்ட் போட்டியை, ரிஷப் பந்த், அஸ்வின், ஹனுமான் விஹாரியின் ஆகியோரின் மன உறுதியால், டிரா செய்து ஆஸ்திரேலியாவின் முகத்தில் கரி பூசியது இந்திய அணி.

இப்போது பிரிஸ்பன் மைதானத்தில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில்,  “நாங்கள் தோற்றதே இல்லை!” என்கிற ஆஸ்திரேலிய அணியின் இறுமாப்பை உடைத்து ஆஸ்திரேலியா அணிக்கு தோல்வியை பரிசாக கொடுத்துள்ளது இந்திய அணி. சச்சின் டெண்டுல்கர், கங்குலி, டிராவிட், லட்சுமணன், ஜாகீர் கான், வெங்கடேச பிரசாத், ஹர்பஜன் சிங் போன்ற ஜாம்பவான்களுடன் இந்திய அணி 2001ல் பெற்ற வெற்றியை விட தற்போதைய இளம் இந்திய அணி தீயாக வேலை பார்த்துள்ளதாக முன்னாள் வீரர்கள் புகழ்ந்து வருகின்றன.

இதனிடையே பிரிஸ்பனில் இன்று ஆட்ட நாயகனான ரிஷப் பந்த் (89 ரன்களுக்கு, நாட் அவுட்), ஹேசில்வுட் பந்தை மிட் ஆஃப் பவுண்டரிக்கு அனுப்பி வரலாற்று தொடர் வெற்றியை பதிவு செய்தார். இந்த டெஸ்ட் வெற்றியை பந்த் பெற்ற அந்தத் தருணத்திலேயே இந்திய அணிக்கு ரூ.5 கோடி பரிசு அறிவித்து பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலர் ஜெய் ஷா இருவரும்  ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அசத்தியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் ஸ்மித், வார்னர், டிம் பெய்ன் போன்றவர்கள் இருந்தும் இந்திய அணி அவர்களை சுருண்டு போக வைத்துள்ளது. இப்போது உலக அணிகளுக்கு சவாலாகத் திகழ்கிறது இந்திய அணி.  கோலி, ரஹானே, ரோஹித், ரிஷப் பந்த் என அனைவரின் உறுதியும் இதற்குக் காரணமாக சொல்லப்படுகிறது.

இதுபற்றி பேசிய கங்குலி, “என்ன ஒரு வெற்றி!! ஆஸ்திரேலியாவுக்கு போய் இப்படி ஒரு வெற்றியைப் பெறுவது என்பது சாதாரணமல்ல. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இது ஒரு நீண்ட கால நினைவைத் தரும் வெற்றி. இந்த வெற்றியின் மதிப்பு எண்ணிலடங்காதது.

எனவே பிசிசிஐ இந்திய அணிக்கு ரூ.5 கோடி போனஸ் அறிக்கிறது. அனைவருக்கும் பாராட்டுக்கள், வெல்டன்!” என்று பதிவிட்டுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்