‘மும்பையில் அலுவலகத்தை மூடிய பிசிசிஐ’... ‘ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்’... விபரங்கள் உள்ளே!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொரோனா பாதிப்பால் மும்பை கஸ்தூரிபா மருத்துவமனையில் 64 வயது நபர் உயிரிழந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் மும்பையில் உள்ள தலைமையத்தை மூடியுள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸ் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இந்த வைரசால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 117-ஐ தாண்டியுள்ளநிலையில், 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அனைத்து மாநிலங்களும் உச்சக்கட்ட முன்னெச்சரிக்கை பாதுகாப்பை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மேலும் அங்கு இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் மும்பையில் உள்ள தலைமையகத்தை மூடியுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம். மேலும், ஊழியர்கள் வேலைகளை வீட்டில் இருந்து கவனித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வரும் 29-ம்தேதி தொடங்க இருந்த ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 15-ம் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு அறிவிக்கப்பட்டு 3 நாட்கள் ஆன நிலையில் இந்தத் தொடரில் கலந்து கொண்டுள்ள 8 அணிகளின் பயிற்சி முகாம்கள் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

BCCI, MUMBAI, IPL, CRICKET, COVID19

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்