'அது என்ன... கோலி டீமுக்கு மட்டும் ஸ்பெஷல் கவனிப்பு'?.. பிசிசிஐ பாகுபாடு?.. பெண்கள் அணி சரமாரி குற்றச்சாட்டு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்து செல்லும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனைகளை சொந்தமாக கொரோனா டெஸ்ட் ரிசல்ட் கொண்டு வர வேண்டும் என்று பிசிசிஐ கூறியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் ஜூன் 18 முதல் 22 வரை நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதற்காக, அடுத்த மாதம் 2ம் தேதி இந்திய அணி இங்கிலாந்துக்கு புறப்படுகிறது.

அதேசமயம், மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் அணியும், இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள், நாளை (மே 19) புதன்கிழமை முதல், மும்பையில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

அதேபோல், மகளிர் அணியும் நாளை முதல் தனிமைப்படுத்தலில் ஈடுபடுகிறது. இதற்கான பயோ - பபுள் நடைமுறை ஏற்கனவே தொடங்கிவிட்டது. வீரர்கள் வேறு எந்த இடத்திற்கும் செல்ல முடியாத வகையில் நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. வெளியில் இருந்து வரும் எவரையும் வீரர்கள் பார்க்க அனுமதி கிடையாது. 

இந்த நிலையில் தான், ஒரு புது சிக்கல் எழுந்துள்ளது. அதாவது, இங்கிலாந்து செல்லும் ஒவ்வொரு வீரருக்கும் தனித்தனியாக பிசிசிஐ கொரோனா பரிசோதனை மேற்கொள்கிறது. அதேசமயம், மகளிர் அணியின் வீராங்கனைகளை அவர்களது சொந்த செலவில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வந்து ரிசல்ட் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி, ரிசல்ட் ரிப்போர்ட் கொடுத்தால் தான், மும்பை பயோ-பபுளுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து, இரண்டு கிரிக்கெட் வீராங்கனைகள் வெளிப்படையாகவே தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இரு அணிகளும் ஒன்றாகவே இங்கிலாந்து செல்கின்றன. அப்படி இருக்கையில், ஏன் இந்த பாகுபாடு என்று அவர்கள் கேள்வி எழுப்புவதாக கூறப்படுகிறது. மும்பையில் தங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பே வீரர்கள் கொரோனா ரிப்போர்ட் கொடுத்திருக்க வேண்டும். 

இந்த மூன்று டெஸ்ட் ரிப்போர்ட் கொடுக்கப்பட்ட பிறகு இறுதியாக பயோ-பபுளுக்குள் நுழைவதற்கு முன்பு, பிசிசிஐ ஒரு சோதனை மேற்கொள்ளும். அதிலும் நெகட்டிவ் என்று வருபவர்களே ஹோட்டலில் தங்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த சூழலில், பிசிசிசி-யின் இரு வெவ்வேறு கொள்கைகள் குறித்து கசிந்துள்ள செய்தி தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்