‘க்ரீன் சிக்னல் கிடைச்சிருச்சு’!.. இனி ஃபீல் பண்ண வேண்டிய அவசியமில்லை.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடர் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

‘க்ரீன் சிக்னல் கிடைச்சிருச்சு’!.. இனி ஃபீல் பண்ண வேண்டிய அவசியமில்லை.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!

இந்தியாவில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய கிரிக்கெட் வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதனால் ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மொத்தம் 60 போட்டிகள் கொண்ட தொடரில் 29 போட்டிகளே முடிவடைந்துள்ளன. அதனால் எஞ்சிய போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது.

BCCI confirms England players availability for league in UAE

இதனிடையே இங்கிலாந்து வீரர்கள் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. டி20 உலகக்கோப்பை தொடர் நெருங்கி வருவதால், அதனை மனதில் வைத்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை எடுத்ததாக சொல்லப்பட்டது. இது ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

BCCI confirms England players availability for league in UAE

இந்த நிலையில் இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதை பிசிசிஐ உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறி்த்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், ‘ஐபிஎல் டி20 தொடரில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்பை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதி செய்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் பேசி ஒப்புதலை பெற்றுள்ளார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிஜாமுதின் சவுத்ரி கூறுகையில், ‘டி20 உலகக்கோப்பை போட்டிக்குப்பின், இங்கிலாந்து அணியுடன் ஒருநாள், டி20 தொடரை விளையாடுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்படும். இரு அணிகளும் உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக ஏராளமான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளனர். அதனால், இந்த தொடரை டி20 உலகக்கோப்பை முடிந்தபின் எப்போது நடத்தலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் சமயத்தில் இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி20 மற்றும் ஒருநாள் தொடர் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது இந்த தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் ஜாஸ் பட்லர், இயன் மோர்கன், பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்சர், சாம் கர்ரன், டாம் கர்ரன், மொயின் அலி என அதிகமான இங்கிலாந்து வீரர்கள் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்