ஆரம்பிக்கலாங்களா..! ‘முதல்முறையாக நம்ம சிங்கார சென்னையில்’.. சிஎஸ்கே போட்ட ‘சூப்பர்’ ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் 2021 தொடருக்கான வீரர்கள் ஏலம் முதல்முறையாக சென்னையில் நடைபெற உள்ளது.

ஆரம்பிக்கலாங்களா..! ‘முதல்முறையாக நம்ம சிங்கார சென்னையில்’.. சிஎஸ்கே போட்ட ‘சூப்பர்’ ட்வீட்..!

2008-ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர், கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர், வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் அணிகள் தங்கள் அணியில் இடம்பெற்றுள்ள முக்கிய வீரா்களை தக்கவைப்பதற்கான காலக்கெடு கடந்த 20ம் தேதியுடன் முடிவடைந்தது. புதிய வீரர்களை தேர்வு செய்யும் விதமாக 8 அணிகளும் தங்கள் வசமிருந்த வீரர்கள் பலரை விடுவித்துள்ளன.

BCCI confirmed, IPL 2021 Auction to be held in Chennai

சிஎஸ்கே அணியை பொறுத்தவரை முரளி விஜய், கேதார் ஜாதவ், ஹர்பஜன் சிங், பியூஷ் சாவ்லா, மோனு சிங், ஷேன் வாட்சன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஐபிஎல் ஏலம் வரும் பிப்ரவரி 18-ம் தேதி நடைபெறும் என தற்போது அதிகாரபூர்வமாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த ஐபிஎல் ஏலம் முதல் முறையாக சென்னையில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுகுறித்து தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், ஆரம்பிக்கலாங்களா!... இந்த முறை எல்லோவ் பேமிலி நம்ம ஊரு ஸ்நாக்ஸ் சாப்பிட்டுக்கொண்டு சிங்கங்களை (வீரர்களை) சேர்க்கப் போகிறோம்’ என பதிவிட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்