‘இனி கேப்டனும் பயிற்சியாளருமே இதில் முடிவெடுக்கலாம்..’ குழு சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பிசிசிஐ..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய வீரர்கள் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களின்போது குடும்பத்தினருடன் நேரம் செலவளிப்பது தொடர்பாக அணியின் கேப்டனும், பயிற்சியாளருமே முடிவெடுக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களின்போது தங்களது மனைவி மற்றும் குடும்பத்தினரை உடன் அழைத்து வருவது வழக்கம். இதுபோன்ற சுற்றுப் பயணங்களில் வீரர்கள் இரண்டு வாரங்கள் வரை அவர்களைத் தங்களுடன் தங்க வைத்துக் கொள்ளலாம். குடும்பத்தினருடன் செலவளிக்க எனத் தனியாக வீரர்களுக்கு நேரமும் ஒதுக்கப்படுகிறது. இருப்பினும் இதில் சில பிரச்சனைகளும் முன்னதாக எழுந்துள்ளன.

இதுவரை இந்திய வீரர்கள் சுற்றுப் பயணங்களின்போது குடும்பத்தினருடன் செலவளிக்கும் நேரம் குறித்த  முடிவுகளை பிசிசிஐ நிர்வாகமே எடுத்துவந்துள்ளது. ஆனால் தற்போது உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள நிர்வாகிகள் குழுவானது இந்திய அணி வீரர்களின் இதுதொடர்பான கோரிக்கைகளுக்கு அணியின் கேப்டனும், பயிற்சியாளருமே முடிவெடுக்கலாம் எனக் கூறுவது பிசிசிஐ தரப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ICCWORLDCUP2019, TEAMINDIA, BCCI, CAPTAIN, COACH, VIRATKOHLI, RAVISHASTRI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்