'இது' மட்டும் நடந்துச்சுனா... போட்டியில் விளையாட தடை!!.. ஐபிஎல் அணி கேப்டன்களுக்கு வேட்டு வைத்த பிசிசிஐ!.. பீதியில் மற்ற வீரர்கள்!.. ஏன் இந்த அதிரடி?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரில் பிசிசிஐ விதித்துள்ள புதிய விதிமுறை அணியின் கேப்டன்களுக்கு மிகப்பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச தொடர்களில் வரும் பிரச்னைகள் ஐபிஎல்-ல் வந்துவிடக்கூடாது என்பதற்காக பிசிசிஐ பல்வேறு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி தற்போது அறிவித்துள்ள ஒரு விதிமுறை அணி கேப்டகளின் பணத்தில் கை வைக்கவுள்ளது.  

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் வரும் ஏப்ரல் 9ம் தேதி, சென்னையில் தொடங்கவுள்ளது. சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து வரும் சாஃப்ட் சிக்னல், ஷார்ட் ரன் போன்ற பிரச்னைகள் ஐபிஎல் தொடரில் வந்துவிடக்கூடாது என்பதற்காக பிசிசிஐ பல வித்தியாசமான விதிமுறைகள் அறிவித்துள்ளது. 

அதன்படி இந்த ஆண்டு 3வது நடுவருக்கு பரிசீலனைக்கு வரும் முடிவுகளில் கள நடுவர்களின் சாப்ட் சிக்னல் விதிமுறை இருக்காது, எந்த முடிவானாலும் 3வது நடுவர்தான் எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கள நடுவர்கள் எடுக்கின்ற ஷார்ட் ரன் மற்றும் நோ பால் தொடர்பான முடிவுகளிலும் 3வது நடுவர்களின் குறுக்கிடலாம் என தெரிவிக்கபட்டுள்ளது. 

அதே போல் அணிகள் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொள்வதை தடுக்க, விதிமுறைகள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 20 ஓவர்களும் ஆட்டத்தின் 90 நிமிடங்களுக்குள் வீச வேண்டும். ஆட்டத்தின் போது 2 முறை அளிக்கப்படும் 2.30 நிமிடங்கள் இடைவேளைகளும் இதில் அடங்கும். அப்படி வீசவில்லை என்றால் அணியின் கேப்டன்களுக்கு அபாராதம் விதிக்கப்படும். 

ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் அணியின் கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்படும். அதே தவறை 2வது முறையாக செய்தால் கேப்டனுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்படும். 3வது முறையாக செய்தால் கேப்டனுக்கு ரூ.30 லட்சம் மற்றும் அவர் ஒரு ஆட்டத்தில் ஆட தடையும் விதிக்கப்படும். 

இதே போல அணி வீரர்களுக்கும் அபராதம் உண்டு. முதல் முறை அதிகம் நேரம் எடுத்துக்கொண்டால் எந்தவித அபராதமும் மற்றவர்களுக்கு இல்லை. 2வது முறையாக அதனை செய்தால் அணி வீரர்கள் ஓவ்வொருவரும் தலா ரூ.6 லட்சம் அல்லது போட்டி தொகையில் 25% அபராதம் விதிக்க வேண்டும். 3வது முறை செய்தால் அணி வீரர்கள் ஒவ்வொருவரும் ரூ. 12 லட்சம் அல்லது போட்டி தொகையில் 50% செலுத்த வேண்டும்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்