இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. லிஸ்ட்ல இடம்பெறாமல் போன நட்சத்திர வீரர்.. முழு விபரம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் களமிறங்க இருக்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | 17.5 கோடிக்கு மும்பை இந்தியன்ஸால் வாங்கப்பட்ட கேமரூன் க்ரீன்.. டெஸ்ட் போட்டியில் காயம்.. ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத சூழ்நிலை?

இந்திய அணி சமீபத்தில் வங்க தேசத்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டது. ஏற்கனவே நடைபெற்ற ஒருநாள் தொடரை வங்க தேசம் கைப்பற்றியது. பின்னர் துவங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்தது. இதனை தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்றது. போட்டியிலும் இந்தியா வெற்றிபெற்று 2 - 0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து, இந்திய அணி இலங்கையுடன் விளையாட இருக்கிறது.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கும் இலங்கை அணி 3 ஒருநாள் மற்றும் 3 T20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் T20 போட்டிகளுக்கு ஹர்திக் பாண்டியாவும் ஒருநாள் தொடருக்கு ரோஹித் ஷர்மாவும் இந்திய அணியை வழிநடத்த இருக்கின்றனர். T20 தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான கோலி, ரோஹித் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது.

வங்கதேச தொடரில் ஒருநாள் போட்டியின்போது ரோஹித் ஷர்மாவுக்கு கையில் காயம் ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து, அவர் தொடரில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது. அதேபோல, இந்திய அணியின் கீப்பரான ரிஷப் பண்ட்க்கும் இலங்கைக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

T20 போட்டிகளுக்கான இந்திய அணி

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக், சிவம் மாவி, முகேஷ் குமார்.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி

ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், முகமது ஷமி, முகமது சிராஜ் , உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.

Also Read | முதல் ஐபிஎல் ஏலத்தில் தோனி செஞ்ச சம்பவம்.. 15 வருசமா தொட முடியாத ரெக்கார்டு.. மிரண்டு போன ரசிகர்கள்!!

CRICKET, BCCI, INDIA T20I, ODI SQUADS, SRI LANKA SERIES, BCCI ANNOUNCES INDIA T20I AND ODI SQUADS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்