'டெஸ்ட்' போட்டிக்கான 'இந்திய' அணியை வெளியிட்ட 'பிசிசிஐ'!!... "அவர 'டீம்'ல எடுக்காம அப்டியே ஒதுக்கலாம்ன்னு பாக்குறீங்களா??..." கடுப்பான 'ரசிகர்கள்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பமாகவுள்ளது.

இந்திய கேப்டன் விராட் கோலி, தன்னுடைய குழந்தை பிறக்கவுள்ளதையொட்டி அவர் இந்தியா திரும்பவுள்ளதால், மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டார். இதனால் அவருக்கு பதிலாக இந்திய அணியை ரஹானே வழிநடத்தவுள்ளார். இந்நிலையில், நாளைய போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன் யார் என்பதை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

முதல் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 36 ரன்களில் சுருண்டு படுமோசமான தோல்வியை சந்தித்திருந்தது. இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பியிருந்தனர். இதனையடுத்து, நாளைய போட்டியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தொடக்க ஆட்டக்காரரான இளம் வீரர் ப்ரித்வி ஷாவுக்கு பதிலாக மற்றொரு இளம் வீரர் சுப்மன் கில் சேர்க்கப்பட்டுள்ளார். அதே போல, காயத்தால் விலகியுள்ள பந்து வீச்சாளர் ஷமிக்கு பதிலாக சிராஜ் அணியில் இணைந்துள்ளார். சிராஜ் மற்றும் கில் ஆகியோருக்கு இது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியாகும்.

காயம் காரணமாக முதல் போட்டியிலிருந்து விலகியிருந்த ரவீந்திர ஜடேஜா இந்த போட்டியில் அணியில் இடம் பிடித்துள்ளார். விக்கெட் கீப்பர் சஹாவுக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஷமி காயம் காரணமாக விலகியுள்ளதால் வலைப் பந்து வீச்சாளராகவுள்ள நடராஜன் அணியில் இணைவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அது குறித்து பிசிசிஐ எதுவும் குறிப்பிடவில்லை.

 

மேலும், அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன் கே.எல் ராகுலிற்கு இரண்டு போட்டியாக ஏன் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்றும், வேண்டுமென்றே அவரை அணி நிர்வாகம் புறக்கணிக்கிறதா என்பது போன்ற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருவது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இந்திய அணி விவரம் : அஜிங்கிய ரஹானே (கேப்டன்), மயங்க் அகர்வால், சுப்மன் கில், சட்டீஸ்வர் புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், உமேஷ் யாதவ், ஜஸ்ப்ரிட் பும்ரா, முகமது சிராஜ்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்