'இந்திய' அணியில் இருந்து 'கழற்றி விடப்பட்டாரா 'நடராஜன்'??.. என்னாது, நல்லா ஆடியும் 'நட்டூ' பேரு மிஸ்ஸிங்கா??.." அதிர்ச்சியில் உறைந்த 'ரசிகர்கள்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ (BCCI), 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்த பட்டியலை சற்று முன் வெளியிட்டிருந்தது.

இதில், இந்திய வீரர்கள் ஏ பிளஸ் (A+), ஏ (A) , பி (B) , சி (C)  என நான்கு வகையாக பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு முறையே 7 கோடி, 5 கோடி, 3 கோடி மற்றும் 1 கோடி என சம்பளம் வழங்கப்படுகிறது. இதன் ஏ பிளஸ் பட்டியலில், இந்திய கேப்டன் விராட் கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அஸ்வின், ஜடேஜா, ரஹானே, புஜாரா, ஷிகர் தவான், கே எல் ராகுல், முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா ஆகியோரது பெயர் 'ஏ' பிரிவிலும், சஹா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாக்கூர் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோரது பெயர் 'பி' பிரிவிலும் இடம்பெற்றுள்ளது.

 



அதே போல, குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, தீபக் சாஹர், சுப்மன் கில், ஹனுமா விஹாரி, அக்சர் படேல், ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், சிராஜ் மற்றும் சாஹல் ஆகியோரது பெயர், 'சி' பிரிவிலும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், தமிழக வீரர் நடராஜனின் (Natarajan) பெயர், இந்த பட்டியலில் இடம்பெறாதது, ரசிகர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

பொதுவாக, இந்த ஒப்பந்த அடிப்படையில் தான், சம்மந்தப்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான அந்த ஆண்டு செயல்பாடு அமையும். அது மட்டுமில்லாமல், வெளிநாட்டு கிரிக்கெட் கிளப்புகள் நடத்தும் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்வது தொடர்பான நடவடிக்கைகளும் இதன் மூலம் தான் மேற்கொள்ளப்படும்.

ஆனால், கடந்த ஆண்டு இறுதியில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தின் போது, அறிமுகமாகி அசத்தியிருந்த நடராஜனின் பெயர், இந்த பட்டியலில் இடம்பெறாமல் போனது, அதிகம் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்திய அணி நடராஜனை ஒதுக்குகிறதா என்பது போன்ற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்