மூணு 'இளம்' வீரர்களுக்கு வாய்ப்பு...! யாரெல்லாம் வெளிய...? 'நியூசிலாந்து' அணியுடனான போட்டிக்கு 'இந்திய' அணி வீரர்களை அறிவித்த பிசிசிஐ...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி-20 உலகக்கோப்பையின் இந்திய அணியின் ஆட்டம் முடிவடைந்த நிலையில் பிசிசிஐ நியூசிலாந்து அணியுடனான போட்டிக்கு இந்திய அணி வீரர்களை அறிவித்துள்ளது.

Advertising
>
Advertising

ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வரும் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறவில்லை. இந்நிலையில், தற்போது நியூசிலாந்து அணியுடனான போட்டியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதற்கு முன் ஐபிஎல் போட்டி நடைபெற்றவுடன் சில நாட்களிலேயே டி-20 உலகக்கோப்பைக்கு இந்திய அணி தயாரானது. தற்போது வரும் நவம்பர் 17-ஆம் தேதி நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

இந்தியா வரும் நியூசிலாந்து அணி, இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்நிலையில், டி-20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ., இன்று அறிவித்துள்ளது.

விராட் கோலி கேப்டன் விலகிய காரணத்தால் இந்திய டி-20 அணியின் புதிய கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். துணைக் கேப்டனாக கே.எல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிசிசிஐ வெளியிட்ட இந்திய அணியில் ருத்துராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர் மற்றும் ஹர்சல் பட்டேல் ஆகிய மூன்று இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதோடு, சீனியர் வீரர்களான விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, ஜடேஜா போன்றோர் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.

நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய டி-20 அணியில் கால்பதித்துள்ள அஸ்வினுக்கும்,சாஹலுக்கும் நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. மேலும், ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட், இஷான் கிஷன், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ், ஆவேஸ் கான் போன்ற வீரர்கள் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

BCCI, INDIAN PLAYERS, NEW ZEALAND

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்