நெருங்கும் 'டெஸ்ட்' சாம்பியன்ஷிப் இறுதி போட்டி.. 'இந்திய' அணியை அறிவித்த 'பிசிசிஐ'.. யார் யாருக்கு எல்லாம் 'வாய்ப்பு'?!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொரோனா தொற்றிற்கு மத்தியில், இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் , சில அணிகளைச் சேர்ந்த வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான காரணத்தினால், பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

மீதமுள்ள போட்டிகள் வேறு நாட்டில் வைத்து நடைபெறுவது குறித்து பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளதால், அடுத்ததாக நடைபெறவுள்ள முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியை, கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே ஜூன் மாதம் 18-ஆம் தேதியன்று, இங்கிலாந்தில் உள்ள சவுதாம்டனில் ஆரம்பமாகிறது. இதற்காக, இந்திய அணியில் யாரெல்லாம் இடம்பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு, இந்திய ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில், இந்திய அணியின் வீரர்கள் பட்டியலை, பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு பிறகு, வரும் ஆகஸ்ட் மாதம், இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி மோதவுள்ளது. இது இரண்டிற்கும் சேர்த்து தான், இந்திய அணியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
 

 

இந்திய அணி வீரர்கள் விவரம்:

விராட் கோலி (Captain), ரஹானே (Vice Captain), ரோஹித் ஷர்மா, சுப்மன் கில், மயங்க் அகர்வால், புஜாரா, ஹனுமா விஹாரி, அஸ்வின், ஜடேஜா, ரிஷப் பண்ட், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரிட் பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், கே எல் ராகுல், விரித்திமான் சஹா.

Standby வீரர்கள் விவரம் :

அபிமன்யு ஈஸ்வரன், பிரஷித் கிருஷ்ணா, அவேஷ் கான், அர்ஷன் நக்கவாஸ்வல்லா.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜொலித்த வீரர்களை வைத்து, இந்த அணியை பிசிசிஐ தேர்வு செய்துள்ள நிலையில், கே எல் ராகுல் மற்றும் சஹா ஆகியோர், உடற்தகுதியை நிரூபித்த பிறகு, அணியில் இடம்பெறுவார்கள் என பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது.

அதே போல, சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில், டெல்லி அணிக்காக ஆடிய இளம் வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கான் பெயரும், standby வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்