'அப்படி பண்ணி இருக்க கூடாது'...ஆனா மன்னிச்சிட்டோம்...'சிக்கலில் இருந்து தப்பிய 'தினேஷ் கார்த்திக்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதினேஷ் கார்த்திக்கின் மன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளதையடுத்து அவர் சிக்கலில் இருந்து தப்பியுள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக், ஐ.பி.எல். போட்டியில் இந்தி நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார்.சமீபத்தில் வெஸ்ட் இண்டீசில் நடந்து வரும் கரிபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் டிரின்பகோ நைட் ரைடர்ஸ் அணியின் சில ஆட்டங்களை காண அங்கு சென்றார். டிரின்பகோ அணியானது நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமான அணியாகும்.
இந்நிலையில் டிரின்பகோ அணியின் சீருடையுடன் அவர்களது ஓய்வறையில் தினேஷ் கார்த்திக் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி கடும் சர்ச்சையை கிளப்பியது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஓப்பந்தத்தில் இருக்கும் கார்த்திக், பிசிசியின் விதிகளை மீறிவிட்டதாக புகார் எழுந்ததது. இதனால் உங்களது ஒப்பந்தத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்டு கிரிக்கெட் வாரியம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதையடுத்து தினேஷ் கார்த்திக் அனுப்பிய விளக்க கடிதத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் '‘வெஸ்ட் இண்டீசில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க நான் அங்கு செல்லவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய பயிற்சியாளர் பிரன்டன் மெக்கல்லத்தின் அழைப்பின் பேரில் சென்றேன். டிரின்பகோ அணியின் பயிற்சியாளராகவும் அவர் இருக்கிறார். கொல்கத்தா அணி தொடர்பாக ஆலோசிக்க இந்த பயணம் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதியதாலேயே சென்றேன்.
இருப்பினும் கிரிக்கெட் வாரியத்தின் அனுமதி பெறாமல் வெஸ்ட்இண்டீஸ் சென்றதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறன்'' என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.இதற்கிடையே ஐ.பி.எல். தவிர வேறு எந்த தனியார் லீக் கிரிக்கெட் போட்டிகளிலும், அது தொடர்பான நிகழ்வுகளிலும் வீரர்கள் கலந்து கொள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டதால் தினேஷ் கார்த்திக் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படமாட்டாது என்றும் இந்த பிரச்சினை இத்துடன் முடித்து கொள்ளப்பட்டது என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- நம்ம 'சிங்கம்' இப்போ 'டில்லி' ராஜா .. சிறந்த பேட்ஸ்மேன் விருதை வென்ற 'சென்னை' கிங்ஸ் வீரர்!
- ‘தோனி ஸ்டைலில் மின்னல் வேக ஸ்டெம்பிங்’.. ‘மாஸ் காட்டிய ஐபிஎல் பிரபலம்’.. வைரலாகும் வீடியோ..!
- டிஎன்பிஎல் தொடரில் ‘மேட்ச் ஃபிக்ஸிங்’?... ‘வீரர்களை வாட்ஸ்அப்பில் அணுகிய புரோக்கர்கள்’... பிசிசிஐ அதிரடி விசாரணை!
- அடுத்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டன் யார்..? சென்னை அணி உரிமையாளரின் அதிரடி பதில்..!
- ‘புது ஜெர்சியோட இதுதான் முதல் மேட்ச்’.. ஆனா டாஸ் போடறதுக்குள்ள இப்டி ஆகிடுச்சே..! சோகத்தில் ரசிகர்கள்..!
- ப்பா 'என்ன' ஒரு ஆட்டம்..7 பந்துகளில் 7 சிக்ஸர்கள் 'தெறிக்க' விட்ட கூட்டணி-வீடியோ உள்ளே!
- ஒரு காலத்தில் 'ஆட்டோகிராப்' கேட்டு இந்த 'இடத்தில்' நின்றேன்.. மனந்திறந்த கோலி!
- ‘தோனிக்கு கெடச்ச அந்த பெருமை இப்போ கோலிக்கு கெடச்சுருக்கு’.. அது என்ன தெரியுமா..?
- 'போகாதீங்க கேப்டன்'...தோனி ஓய்வு குறித்து சாக்ஷி மறைமுக விளக்கம்!
- ‘இவர் இல்லாமதான் விளையாட போறோம்’.. வெளியான தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான இந்திய வீரர்கள் பட்டியல்..!