‘எங்க டீமுக்கு விளையாட வாங்க’.. லக்னோ அணி கொடுத்த ‘செம’ ஆஃபரை மறுத்த இளம் வீரர்.. இதுதான் காரணம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுலக்னோ அணி கொடுத்த ஆஃபரை வங்க தேச இளம் வேகப்பந்து வீச்சாளர் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு முதல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு அணிகள் இணைகின்றன. இந்த நிலையில் லக்னோ அணியில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து வீரர் மார்க் வுட் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அதனால் அவருக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்ய லக்னோ அணி தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி வங்கதேச அணியை சேர்ந்த டஸ்கின் அகமதுக்கு லக்னோ அணி சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த வாய்ப்பினை அவர் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து வங்கதேச அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வங்கதேச அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து சொந்த மண்ணில் இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும் வங்கதேச அணி விளையாட இருக்கிறது.
இந்த தொடர்களில் டஸ்கின் அஹமது இடம் பெற்றுள்ளதால் அவர் ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிக்கப்பட மாட்டார். அவரிடம் இந்த ஐபிஎல் வாய்ப்பு குறித்து பேசி இருந்தோம். ஆனால் அவரும் அணியின் நலன் கருதி அதனை புரிந்து கொண்டு, தான் ஐபிஎல் தொடரில் விளையாட வில்லை என கூறிவிட்டார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக லக்னோ அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர், டஸ்கின் அகமது எங்கள் அணியுடன் இணைந்து நன்றாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார். அப்படி அவர் அணியில் இணையும் பட்சத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடரை தவிர்த்து விட்டு லக்னோ அணியுடன் இணைவார் என கம்பீர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தோனிக்கு அப்புறம் சிஎஸ்கே கேப்டன் இவர்தான்.. மூத்த வீரரை கை காட்டும் ஆகாஷ் சோப்ரா.. வாய்ப்பு இருக்கா..?
- ஐபிஎல் ஆரம்பிக்க இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கு.. திடீர்னு விலகும் முக்கிய வீரர்?.. லக்னோ அணிக்கு ஆரம்பமே சோதனை..!
- அவர் இடத்தை இன்னொருத்தர் நிரப்புறது ரொம்ப கஷ்டம்.. என்ன செய்யப்போறாங்க சிஎஸ்கே?.. இர்பான் பதான் ஓபன் டாக்..!
- என்னய்யா நடக்குது?… ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் டிவிட்டர் கணக்கை ஹேக் செய்தாரா சாஹல்?
- "அவ்ளோ சீக்கிரம் போயிட மாட்டேன்.." மீண்டும் IPL -ல் ரெய்னா என்ட்ரி.. CSK மேட்ச் வர்றப்போ அள்ளப் போகுது..
- IPL 2022 : "அதுக்கு தான் நான் 'Waiting'.." தோனியைக் குறிப்பிட்டு ஹர்திக் பாண்டியா சொன்ன விஷயம்.. மல்லுக்கட்ட ரெடி..
- “எப்பவும் நான் உன் பக்கம் தான்.." மகனின் கையை இறுக பிடித்து.. உறுதி கொடுத்த இந்திய கிரிக்கெட் வீரர்.. வைரல் புகைப்படம்
- ஒரு பக்கம் தோனியின் அட்வைஸ்.. மறுபக்கம் சிக்ஸர்கள்.. சிங்கக்குட்டி மாதிரி தயாராகும் இளம் வீரர்.. "யாரு சாமி இந்த பையன்??.."
- "ஐபிஎல் நேரத்துல.. அந்த ஒரே ஒரு பிளேயர்னால தூக்கமே இல்லாம தவிச்சேன்.." பழசை நினைத்து ஃபீல் பண்ணிய கம்பீர்
- ”சூரத்தில் பிராக்டிஸ்".. அட்டகாசமான புது லுக்கில் தல தோனியின் வைரல் புகைப்படம்..