‘இந்த 7 பேரை விளையாட அனுப்புங்க’!.. ‘இந்திய வீரர்களை பிசிசிஐயிடம் கேட்ட வங்கதேசம்’..! யாரெல்லாம்..? எதுக்கு..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வங்கதேசத்தில் நடைபெற உள்ள டி20 போட்டியில் விளையாடுவதற்கு 7 இந்திய வீரர்களை அனுப்ப பிசிசிஐயிடம் அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் அனுமதி கேட்டுள்ளது.

வரும் 2020-ம் ஆண்டு வங்கதேச கிரிக்கெட் நிர்வாகம் தங்கள் நாட்டில் இரண்டு டி20 போட்டிகளை நடத்த உள்ளது. இப்போட்டி ஆசிய லெவன் மற்றும் உலக லெவன் வீரர்களுக்கு இடையே நடைபெற உள்ளது. இப்போட்டிகளை ஐசிசி அங்கீகரித்துள்ளது. இதனை அடுத்து இந்த போட்டியில் விளையாடுவதற்காக 7 இந்திய வீரர்களை பிசிசிஐயிடம் வங்கதேச அணி நிர்வாகம் கேட்டுள்ளது. அதில் முதல் வீரராக தோனி இடம்பிடித்துள்ளார்.

இதனை அடுத்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ரோஹித் ஷர்மா, பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், ஜடேஜா ஆகியோரை அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து கூறிய வங்கதேச அணி நிர்வாகி, வங்தேசம் ஆசிய லெவன் மற்றும் உலக லெவன் என்ற டி20 போட்டி நடத்த உள்ளது. இதில் விளையாடுவதற்கு 7 இந்திய வீரர்களை அனுப்ப பிசிசிஐயிடம் அனுமதி கேட்டுள்ளோம் என கூறியுள்ளார்.

CRICKET, BCCI, MSDHONI, VIRATKOHLI, HARDIKPANDYA, RAVINDRA JADEJA, JASPRITBUMRAH, ROHITSHARMA, BHUVNESHWARKUMAR, BANGLADESH, BCB

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்