'என்னது!... இனி டீமுக்கு 13 Players-ஆ???'... 'இதுக்கே ஷாக்கானா எப்படி?!!... 'ஏடாகூடமாக Rulesஐ மாற்றிய பிரபல டி20 தொடர்'... 'கிழித்து தொங்கவிடும் ரசிகர்கள்!!!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவின் ஐபிஎல் தொடர் போலவே ஆஸ்திரேலியாவில் பிரபலமான பிக் பாஷ் லீக் எனும் டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
பிபிஎல் எனும் இந்த டி20 தொடரில் சுவாரஸ்யத்தை கூட்டி ரசிகர்களை ஈர்ப்பதற்காக அடிக்கடி கிரிக்கெட்டை தாண்டிய சில புதுப்புது விஷயங்கள் உள்ளே புகுத்தப்பட்டு வருகிறது. தற்போது அந்த வரிசையில் 2020 பிக் பாஷ் லீக் தொடரில் 3 புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து ரசிகர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிண்டல் செய்து வருகின்றனர். ஐபிஎல்லுக்கு அடுத்து மிகப் பெரும் டி20 லீக் தொடராக பிபிஎல் உள்ளபோதும் ஒவ்வொரு ஆண்டும் அதிக பார்வையாளர்களை ஈர்க்க வேண்டும் என்ற அழுத்தத்தில் அதன் நிர்வாகிகள் இருப்பதாலேயே இதுபோன்ற புதுமைகள் தற்போது புகுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில்தான் பிக் பாஷ் லீக் நிர்வாகம் தற்போது மூன்று வித்தியாசமான விதிகளை அமல்படுத்தியுள்ளனர். பவர்பிளே ஓவர்களை மாற்றி அமைக்கும் பவர் சர்ஜ், 13 வீரர்களை கொண்ட அணியில் மாற்று வீரர்கள் போட்டிகளுக்கு இடையே பங்கேற்க வாய்ப்பளிக்கும் எக்ஸ் ஃபேக்டர், 10 ஓவர்களில் எதிரணியை விட கூடுதல் ரன்கள் எடுத்தால் போனஸ் புள்ளி அளிக்கும் பாஷ் பூஸ்ட் ஆகியவையே அந்த புதிய விதிகள் ஆகும். முன்னதாக கடந்த ஆண்டு பிபிஎல் தொடரில் டாஸ் போட காசு வேண்டாம், பேட்டில் டாஸ் போடலாம் என்ற புதிய முறையை அமலுக்கு கொண்டு வந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
டி20 போட்டிகளில் தற்போது முதல் ஆறு ஓவர்கள் பவர்பிளே ஆக உள்ள நிலையில், அதை மாற்றி அமைத்து முதல் நான்கு ஓவர்கள் பவர்பிளேவாகவும், கூடுதல் இரண்டு ஓவர்கள் பவர்பிளேவை 10 ஓவர்களுக்கு பின் எப்போது வேண்டுமானாலும் பேட்டிங் செய்யும் அணி எடுத்துக் கொள்ளலாம் என்பதே பவர் சர்ஜ் விதியாகும். அதேபோல ஒவ்வொரு அணியும் டாஸ் நிகழ்வின் போது 13 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்து, அணியில் கூடுதலாக உள்ள இரு வீரர்கள் பேட்டிங் செய்யாத ஒரு வீரருக்கு மாற்றாக 10வது ஓவருக்கு பின் பேட்டிங் செய்ய இறங்கலாம் அல்லது ஒரு ஓவருக்கு அதிகமாக பந்து வீசாத ஒரு பந்துவீச்சாளருக்கு மாற்றாக பந்து வீச களத்துக்கு வரலாம்.
மேலும் இனி வெற்றி பெறும் அணிக்கு 2 புள்ளிகளுக்கு பதிலாக 3 புள்ளிகளும், முதல் 10 ஓவர்களில் எதிரணி எடுத்த ஸ்கோரை சேஸிங் செய்யும் அணி 10 ஓவர்களில் முந்தினால் ஒரு போனஸ் புள்ளியும், அதை செய்யத் தவறினால் முதலில் பேட்டிங் செய்த அணிக்கு ஒரு போனஸ் புள்ளியும் வழங்கப்பட உள்ளது. இந்த புதிய விதிகள் மூலம் பிபிஎல் கிரிக்கெட் தொடர் முன்னேற்றம் அடையும் என நிர்வாகத்தின் தரப்பில் கூறப்பட்டாலும் ரசிகர்கள் இவையெல்லாம் நல்ல கிரிக்கெட்டை மோசமாக்கும் முயற்சியே எனக் கூறி இந்த மாற்றத்தை கடுமையாக சாடி வருகின்றனர்.
இந்த மூன்று விதிகளில் பவர் சர்ஜ் என்பது முன்பு ஒருநாள் போட்டிகளில் ஐசிசியால் அறிமுகம் செய்யப்பட்டபோதும், தற்போது அந்த விதி மாற்றப்பட்டு கட்டாய பவர்பிளே மட்டுமே உள்ளது. அதைத் தவிர மீதமுள்ள 2 மாற்றங்களான 10 ஓவர்களில் எடுத்த ஸ்கோரை முந்துவது, மாற்று வீரரை ஆட வைப்பது போன்றவை உண்மையான கிரிக்கெட்டை அழிக்கும் எனவே ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும் சிலர் அடுத்ததாக பிக் பாஷ் லீக் தொடரில் ஸ்ட்ரீட் கிரிக்கெட் போல கேலிக்குரிய விதிகளை அமல்படுத்தினாலும் ஆச்சரியமில்லை என கிண்டல் செய்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "2 வருஷம் முன்னாடியே மும்பை செஞ்ச அந்த காரியம்?!!... அப்படியொரு துணிச்சல் எந்த டீமுக்கும் இல்ல!!!"... 'போட்டுடைத்த கிரிக்கெட் பிரபலம்!'...
- 'IPLல மிரளவெச்சு தான பாத்திருக்கோம் இதுவரைக்கும்?!!'... 'பயிற்சியிலேயே கவனம் ஈர்த்த தமிழக வீரர்!'... 'கனவு நிஜமான வைரல் தருணம்!!!'...
- 'அது ரொம்ப ஸ்பெஷலான மெசேஜ்’... ‘சீனியர் நட்சத்திர வீரர் அனுப்பிய குறுஞ்செய்தி’... ‘குஷியான இளம் வீரர்’...!!!
- 'விராட் கோலியை வெறுக்கறது தான்’... ‘எங்களுக்கு பிடிக்கும்’... ‘ஆனாலும், அவர்கிட்ட இருக்கிற இந்த திறமைதான்’... ‘ஆஸ்திரேலிய கேப்டன் வெளிப்படையாக சொன்ன பதில்’...!!!
- ‘இந்திய அணி வீரர்கள் தங்கியிருக்கும்’... ‘ஓட்டல் அருகே நடந்த சோகம்’... ‘பதறியடித்து ஓடிய உள்ளூர் வீரர்கள்’... ‘வெளியான பரபரப்பு தகவல்!
- ‘குழந்தைகள் தினத்தில்’... ‘சிஎஸ்கே பகிர்ந்த வைரல் வீடியோ’... ‘லிஸ்ட்ல அவரையும் சேர்த்துட்டீங்களா???’... ‘ஜாலியாக கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்’...!!!
- ‘வாய்ப்புக்காக நிறைய இளம் வீரர்கள் காத்திருக்காங்க’... ‘காலத்தின் கட்டாயம் இது’... ‘அதனால ஐபிஎல் தரம் குறையாது’... ‘ராகுல் ட்ராவிட்டின் அதிரடி பதில்’...!!!
- ‘வாழ்வின் முக்கியமான தருணம் அது’... ‘அதனால அவர் ஊருக்கு திரும்புவதை மதிக்கிறேன்’... ‘ஆனாலும் இந்திய அணிக்கு பின்னடைவு தான்’... ‘ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் கருத்து’...!!!
- அடுத்த ஐபிஎல் சீசன்ல ‘கேப்டன்சி’ கை மாறுதா? இது என்னடா புது ‘ட்விஸ்ட்’.. குண்டை தூக்கிப்போட்ட முன்னாள் வீரர்..!
- ‘தீராத குழப்பம்’... ‘அவர ஏன் இந்திய அணியில் சேர்க்கல???’... ‘காட்டமாக பதில் கூறிய கங்குலி’... ‘சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி’...!!!