"சிக்ஸ்ன்னு தான் நெனச்சு இருப்பாங்க".. பவுண்டரி லைனில் நடந்த மேஜிக்.. மெய்சிலிர்த்து போன ரசிகர்கள்!!.. வீடியோ!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவில் தற்போது டி 20 உலக கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை தற்போது எட்டி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

Advertising
>
Advertising

Also Read | "முதல் கணவர் இறந்துடுவார்.!".. ஜாதக நம்பிக்கையா.? காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற பெண்.! திடுக்கிடும் பின்னணி.. நடந்தது என்ன.?

குரூப் 12 சுற்று தற்போது நடைபெற்று வரும் நிலையில், இரண்டு பிரிவுகளிலும் உள்ள பல அணிகளுக்கும் தொடர்ந்து அரை இறுதி வாய்ப்பு அதிகமாக தான் உள்ளது.

இதனால், எந்த அணி அரை இறுதிக்கு முன்னேறும் என்பதை அறிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இடையில் சில போட்டிகள் மழையால் கைவிடப்பட்டிருந்ததும் புள்ளிப் பட்டியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.

இதன் காரணமாக, நடைபெறும் அனைத்து போட்டிகளும் ஒவ்வொரு அணிகளுக்கும் முக்கியம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் மோதி இருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்திருந்த ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக கேப்டன் பின்ச் 63 ரன்கள் எடுத்திருந்தார்.

தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய அயர்லாந்து அணி ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டுகளை இழந்த வண்ணம் இருந்தது. இதனால், 19 ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அயர்லாந்து அணி, 137 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால், ஆஸ்திரேலிய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. மூன்றாவது வீரராக களமிறங்கிய Tucker மட்டும் 71 ரன்களுடன் கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தார்.

இந்த நிலையில், அயர்லாந்து வீரர் Barry McCarthy செய்த ஃபீல்டிங் தொடர்பான வீடியோக்கள் தற்போது கிரிக்கெட் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, 15 ஓவரில் ஸ்டியோனிஸ் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அவர் அடித்த பந்து நேராக சிக்ஸர் லைனுக்கு சென்றிருந்த நிலையில், அனைவரும் சிக்ஸர் என்றே கருதினர். ஆனால், பவுண்டரி லைன் அருகே ஃபீல்டிங் நின்ற Barry McCarthy, மிகவும் அற்புதமாக அந்தரத்தில் பறந்து சிக்ஸர் லைன் மேல் நின்றபடி பந்தை தட்டி உள்ளே அனுப்பினார்.

இதனால், சிக்ஸராகவும் அந்த பந்து மாறவில்லை. பேரியின் திறனை கண்டதும் மைதானத்தில் இருந்தவர்கள் ஆரவாரம் செய்தனர். அதே போல, ஆஸ்திரேலிய அணி வீரர்களும் கைத்தட்டி பாராட்டி இருந்தனர். சிறந்த ஃபீல்டிங் திறனில் இதுவும் ஒன்று என்றும் கிரிக்கெட் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

 

Also Read | "ஆனாலும் ரொம்ப குசும்பு புடிச்ச ஆளு தான்".. Umpire கிட்ட சாஹல் பாத்த வேலை.. ஒரே சிரிப்பு தான் போங்க!!

CRICKET, BARRY MCCARTHY, T20 WORLD CUP, AUS VS IRE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்