'தோற்றாலும் சாதனைப் படைத்த வீரர்'... 'உலகக் கோப்பையில் புதிய வரலாறு'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வங்கதேச அணியின் ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன், சர்வதேச கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்துள்ளார்.

உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. பரபரப்பான ஆட்டத்தில் எட்பாஸ்டன் நகரில் இந்தியா, வங்கதேசம் அணிகள்  கடந்த செவ்வாய்கிழமை மோதின. இதில் வங்கதேச வீரரான அல் ஹசன், 66 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் உலகக் கோப்பை போட்டியில் 542 ரன்கள் சேர்த்து, அதிக ரன் சேர்த்த வீரர்கள் பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய வீரர் ரோகித் சர்மா 544 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

இந்நிலையில், இதுவரை எந்த ஒரு வீரரும் செய்யாத சாதனையை, ஷாகிப் அல் ஹசன் செய்துள்ளார். உலகக் கோப்பை போட்டியில் 500 ரன்கள் அடித்து, 10-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை. முதல் முறையாக இதை ஷாகிப் அல் ஹசன் செய்து வரலாறு படைத்துள்ளார். இதற்கு முன் நியூசிலாந்து வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ், 2007-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் 10 ஆட்டங்களில் 499 ரன்களும், 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்ததே அதிகபட்சமாக இருந்தது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்