‘உலகக்கோப்பை வர நேரம் பாத்தா இப்டி நடக்கணும்’.. தீடீரென காயம் அடைந்த முக்கிய வீரர்.. கலக்கத்தில் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வங்கதேச அணியின் முக்கிய வீரரான ஷாகிப் அல் ஹசன் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது காயமடைந்துள்ளார்.

அயர்லாந்து, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய மூன்று அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி அயர்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த வங்க தேசம் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 292 ரன்கள் எடுத்தது.

இதனைத் தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி 43 ஓவர்களில் 294 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக லிடன் தாஸ் 76 ரன்களும், தமிம் இக்பால் 57 ரன்களும், ஷகிப் அல் ஹசன் 50 ரன்களும் விளாசினர்.

இப்போட்டியில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த வங்கதேச அணியின் முக்கிய வீரர் ஷகிப் அல் ஹசன் 36 -வது ஓவரின் போது காலில் காயம் ஏற்பட்டது. இதனால் காயம் அதிகமாகிவிடக்கூடாது என்பதற்காக பாதியிலேயே மைதானத்தில் இருந்து வெளியேறினார். இதனை அடுத்து உலகக்கோப்பைக்குள் அவர் விரைவில் குணமடைந்து அணிக்கு திரும்புவார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ICCWORLDCUP2019, SHAKIB, BANGLADESH, BCB

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்