'கல்யாண' புடவை,,.. கூடவே கையில 'கிரிக்கெட்' பேட்டு... இணையத்தில் வைரலான 'இளம்பெண்'ணின் 'போட்டோ'... ஆமா யாருயா இந்த 'பொண்ணு'??

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வங்கதேச அணியின் கிரிக்கெட் வீராங்கனையான சஞ்சிதா இஸ்லாம் (Sanjida Islam) சமீபத்தில் முதல் தர கிரிக்கெட் வீரர் மின் மொசாதீக் (Mim Mosaddeak) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணத்தின் போது நடைபெற்ற போட்டோ ஷூட் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. கடந்த வாரம் சஞ்சிதா, மொஸாதீக்கை திருமணம் செய்து கொண்ட நிலையில், அதனைத் தொடர்ந்து சஞ்சிதா திருமண ஆடையுடன் கையில் பேட் எடுத்து கிரிக்கெட் மைதானத்தில் போஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.

தற்போதுள்ள காலகட்டங்களில் திருமண போட்டோஷூட் என்பது மிகவும் புதுமையான யோசனைகளுடன் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் வித்தியாசமான போட்டோஷூட்கள் நெட்டிசன்களிடையே அதிகம் வைரலாகும். அதே போலத் தான் சஞ்சிதாவின் புகைப்படங்களும் தற்போது இணையத்தை கலக்கி வருகின்றன.

பாரம்பரிய திருமண உடையணிந்து கொண்டு கையில் பேட்டுடன் சஞ்சிதா கிரிக்கெட் ஆடும் புகைப்படங்களை பகிர்ந்து வரும் இணையவாசிகள் இந்த கிரிக்கெட் ஜோடிகளுக்கு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றது.

மற்ற செய்திகள்