VIDEO: யாருப்பா இந்த பையன்..? முதல் மேட்ச்லயே தரமான சம்பவம்.. ஏபிடி மாதிரி மிரட்டிய MI வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரர் அடுத்த சிக்சர் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

Advertising
>
Advertising

மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று புனே மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 161 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 51 ரன்களும், திலக் வர்மா 38 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 16 ஓவர்களில் 162 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக பேட் கம்மின்ஸ் 56 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 50 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். அதில் பேட் கம்மின்ஸிக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் இப்போட்டியில் மும்பை அணியில் இடம் பெற்றிருக்கும் தென் ஆப்பிரிக்க இளம் கிரிக்கெட் வீரர் டெவால்ட் பிரிவிஸ் அடித்த சிக்சர் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. அதில் கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி வீசிய 8-வது ஓவரின் முதல் பந்திலேயே இமாலய சிக்சர் விளாசினார். பந்தை அடித்துவிட்டு அது எங்கே செல்கிறது என்று கூட பார்க்கவில்லை. இது கிரிக்கெட் அரங்கில் ‘நோ லுக் சிக்சர்’ என அழைக்கப்படுகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை டெவால்ட் பிரிவிஸ் படைத்தார். மேலும் கிரிக்கெட் உலகில் அடுத்த ஏபி டிவிலியர்ஸ் என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். அதனால் பலரும் இவரை ‘பேபி ஏபிடி’ என அழைக்கின்றனர். நேற்றைய போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய இவர், 19 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUMBAI-INDIANS, KKR, IPL, DEWALDBREVIS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்