"என்ன கண்ணுங்களா, கணக்கு கரெக்ட்டா இருக்குதா?!".. பிரேக் ஆன 'ரோஹித்' - 'ராகுல்' சாதனை!!.. 'தட்டித்' தூக்கிய 'பாபர்' - 'ரிஸ்வான்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் தொடக்க ஜோடியான ரோஹித் - ராகுல் ஆகியோரின் அபார சாதனை ஒன்றை பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான பாபர் - ரிஸ்வான் ஆகியோர் முறியடித்து சாதனை படைத்துள்ளனர்.

Advertising
>
Advertising

மூன்று டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக, சமீபத்தில் பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. இந்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, தொடரைக் கைப்பற்றி அசத்தியிருந்தது. இதன் கடைசிப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 207 ரன்கள் குவித்தது.

சற்று கடின இலக்கை நோக்கி ஆடிய ஆடிய பாகிஸ்தான் அணி, மிகச் சிறப்பாக ஆடி, 19 ஆவது ஓவரிலேயே இலக்கை எட்டி அசத்தியது. குறிப்பாக, பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான பாபர் அசாம் (79 ரன்கள்) மற்றும் முகமது ரிஸ்வான் (87 ரன்கள்) ஆகியோர், முதல் விக்கெட்டிற்கு 158 ரன்கள் எடுத்து, வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது மட்டுமில்லாமல், முக்கியமான சாதனை ஒன்றையும் படைத்து அசத்தியுள்ளனர். இதுவரை, டி 20 போட்டிகளில், இந்திய வீரர்களான ரோஹித் ஷர்மா - கேஎல் ராகுல் ஆகியோர், 5 முறை டி 20 போட்டிகளில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர்.

இதுவே அதிகபட்சமாக இருந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டி 20 போட்டியில், பாபர் அசாம் - முகமது ரிஸ்வான் இணை, முதல் விக்கெட்டிற்கு 158 ரன்கள் சேர்த்ததையடுத்து, இருவரும் இணைந்து, டி 20 போட்டிகளில் ஆறாவது முறையாக 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சாதனை புரிந்தனர். மேலும், தொடக்க வீரரான ரிஸ்வான், இந்த ஆண்டில் மட்டும் டி 20 போட்டிகளில் 2,000 ரன்கள் அடித்து, ஒரு ஆண்டில், டி 20 போட்டிகளில், 2000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்று அசத்தியுள்ளார்.

சமீப காலமாக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றி வரும் இந்த தொடக்க ஜோடி, டி 20 உலக கோப்பை தொடரிலும், இந்திய அணிக்கு எதிராக விக்கெட் எதுவும் இழக்காமல் வெற்றி பெற்று சாதனை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ROHIT SHARMA, KL RAHUL, BABAR AZAM, MOHAMMAD RIZWAN, சாதனை, கிரிக்கெட், இந்திய அணி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்