கிரவுண்ட்ல திடீர்னு கேட்ட பயங்கர சத்தம்.. உடனே வெளியேற்றப்பட்ட வீரர்கள்.. PSL போட்டியின் போது நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபாகிஸ்தானில் பிஎஸ்எல் தொடரின் பயிற்சி ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது மைதானத்திற்கு அருகே பலத்த சத்தம் கேட்டதால் பாதுகாப்பு காரணம் கருதி வீரர்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த சம்பவம் அந்த நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
பாகிஸ்தானில் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த தொடரில் ஆறு அணிகள் பங்கேற்கின்றன. இந்த வருடத்திற்கான பிஎஸ்எல் தொடர் வரும் 13ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்த நிலையில் நேற்று குவெத்தா கிளாடியேட்டர் மற்றும் பெஷாவர் ஷல்மி அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் நடைபெற்றது.
நவாப் அக்பர் புக்தி மைதானத்தில் இந்த பயிற்சி ஆட்டம் நடைபெறும் போது அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. இதனால் பலத்த சத்தம் எழுந்த நிலையில் மைதானத்தில் இருந்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி உள்ளிட்ட வீரர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
Images are subject to © copyright to their respective owners.
இதனால் சற்று நேரத்திற்கு மைதானத்தில் பரபரப்பான சூழலில் நடைபெற்றது. அதன் பின்னர் நிலைமை சகஜமான பிறகு போட்டி மீண்டும் துவங்கியது. இந்நிலையில் இதுகுறித்து போலீசார் வெளியிட்டுள்ள தகவலில்,"குவெத்தா நகரில் நேற்று குண்டுவெடிப்பு நடைபெற்றதை அடுத்து நவாப் அக்பர் புக்தி மைதானத்தில் நடந்துகொண்டிருந்த பயிற்சி ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அப்போது வீரர்கள் அனைவரும் பாதுகாப்பு காரணங்களுக்காக பத்திரமான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நிலைமை சீரான பிறகு போட்டி நடைபெற்றது. இந்த தாக்குதலில் 5 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
கடந்த வாரம் பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 80 பேர் உயிரிழந்த நிலையில் குவெத்தா நகரில் நேற்று தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது அந்த நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மாமனார் - மருமகனான ஷாஹித் அப்ரிடி, ஷாஹீன் அப்ரிடி.. ஒன்று திரண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்..!
- "அந்த ஓவரை மறக்க முடியுமா?.." தோனியின் நம்பிக்கையை ஜெயிச்ச கிரிக்கெட் வீரர் ஓய்வு!!..
- இப்படி ஒரு ஷாட்டை யாருமே Try கூட பண்ணிருக்க மாட்டாங்க.. காயத்துடன் ஹனுமா விஹாரி அடிச்ச பவுண்டரி.. அசந்துபோன வீரர்கள்..வீடியோ!
- "இப்டி கூட ஒரு ஷாட் அடிக்க Try பண்லாம் போலயே".. ஊருக்கே க்ளாஸ் எடுத்த CSK வீரர்.. வைரல் வீடியோ!!
- "ஊரே அம்மாவ சூனியக்காரின்னு சொல்லி ஒதுக்கிச்சு".. கேலி செய்த கிராமம்.. உலக கோப்பை ஜெயிச்சு வீராங்கனை கொடுத்த பதிலடி!!
- சூரிய குமார் யாதவின் வெறித்தனமான கேட்ச்.. மிரண்டு போன வர்ணனையாளர்கள்.. வைரல் வீடியோ..!
- எலும்பு முறிவு.. ஒரே கையில் பேட்டிங்.. கடைசிவரை போராடிய ஹனுமா விஹாரி.. குவியும் பாராட்டுகள்.. வீடியோ..!
- டி 20 கோப்பையை வென்றதும்.. கேப்டன் ஹர்திக் பாண்டியா செஞ்ச விஷயம்.. நெகிழ்ந்த இளம் வீரர்!!
- "IPL வரலாற்றுலேயே அவர் தான் பெஸ்ட் பிளேயர்".. கிரிக்கெட் ஜாம்பவான்கள் கைகாட்டிய வீரர்..!
- "இது கனவா.. நனவா?".. விராட் கோலியிடமிருந்து வந்த பாராட்டு.. சர்ப்ரைஸான இளம் இந்திய கிரிக்கெட் வீராங்கனை..!