‘ஆமா இவர்தான் பாகிஸ்தானோட விராட் கோலி’.. கூறிய முன்னாள் கேப்டன்!.. யாருப்பா அது கோலியோட ஜெராக்ஸ்?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பாகிஸ்தான் வீரரை விராட் கோலியுடன் ஒப்பிட்டு புகழ்ந்து பேசியுள்ளார்.

உலகக்கோப்பை தொடர் வரும் வியாழக்கிழமை(30.05.2019) முதல் இங்கிலாந்தில் தொடங்க உள்ளது. இதில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ள கிரிக்கெட் அணிகள் அங்கு ஒவ்வொரு அணியுடனும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றன.

உலகக்கோப்பை தொடரில் இந்தியா தனது முதல் ஆட்டத்தை ஜூன் 5 -ம் தேதி தென் ஆப்பிரிக்க அணியுடன் மோத இருக்கிறது. அதற்கு முன்னதாக இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் வங்க தேச அணிகளுடன் மோதுகிறது. அதன்படி முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியுடன் இந்தியா விளையாடியது. ஆனால் அப்போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவியது.

இது குறித்து தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின்,‘முதல் பயிற்சி ஆட்டத்தில் தோல்வியடைந்தது எண்ணி பயப்படத்தேவையில்லை. இன்னும் நிறைய போட்டிகள் உள்ளன. மைதானத்தின் தன்மையை புரிந்த கொள்ள வீரர்களுக்கு பயிற்சி ஆட்டம்தான் உதவியாக இருக்கும்’ என தெரிவித்திருந்தார். மேலும் சில தினங்களுகு முன்பு கோலி குறித்தி கூறிய அவர்,‘கோலி ஒருவரால் மட்டும் ஒரு தொடரை வெல்ல முடியாது. அனைத்து வீரர்களின் ஒத்துழைப்பு எல்லா போட்டிகளிலும் இருக்க வேண்டும்’என கூறியிருந்தார்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பாகிஸ்தான் வீரர் பாபர் அஸாமை, விராட் கோலியுடன் ஒப்பிட்டு புகழ்ந்து கூறியுள்ளார். அதில், ‘பாபர் அஸாம் ஒரு சிறந்த வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் பாகிஸ்தானின் விராட் கோலி. பாகிஸ்தான் அணி அரையிறுதி அல்லது இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டுமானால் இளம் வீரர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம்’ என தெரிவித்துள்ளார்.

ICCWORLDCUP2019, VIRATKOHLI, ICC, BCCI, MENINBLUE, BABARAZAM, MICHAEL CLARKE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்