VIDEO: அணிக்கே வினையான கேப்டன் பாபர் அசாமின் செயல்.. 5 ரன்கள் பெனால்டி.. சொல்லவே இல்ல.. இப்படி ஒரு ரூல்ஸ் இருக்கா? WIVsPAK ODI
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமேற்கிந்திய தீவுகளுக்கு (வெஸ்ட் இண்டீஸ்) எதிரான 2வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் செய்த காரியம், பெரும் சிக்கலில் வந்து முடிந்துள்ளது.
Also Read | அப்படி போடு… முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு பென்ஷன் உயர்வு… BCCI அறிவித்த சூப்பர் தகவல்
முல்தானில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்தது பாகிஸ்தான் அணி. பின்னர் 8 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்களை எட்டியது. இதில், அதிகபட்சமாக 77 ரன்கள் அடித்திருந்தார் அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம்.
இதனை தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 155 ரன்களுக்கு தோல்வியை தழுவிய நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்த போது ஒரு தரமான சம்பவம் அரங்கேறியது. ஆம், 28வது ஓவரில் பாகிஸ்தான் வீரத் நவாஸ் பந்துவீச, அதனை ஹூசைன் ஃபைன் லெக் திசைக்கு அடித்துவிட்டார். அப்போது அந்த பந்தை பிடிக்க ஓடிய விக்கெட் கீப்பர் ரிஸ்வான், தனது கை உறையை கழற்றி கீழே போட்டு விட்டார். அதன் பின்னர் அவர் ஓடி, அந்த பந்தை எடுத்தார்.
அந்த சமயத்தில் இதை பார்த்துக்கொண்டிருந்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், அந்த கையுறையை எடுத்து தன் கையில் போட்டு கொண்ட பந்தை பிடித்துவிட்டார். பின்னர் இந்த செயலானது விதிகளுக்கு எதிரானது, அதாவது விதிமீறலான செயல் என்று அறிவித்த நடுவர், வெஸ்ட் இண்டீஸ்க்கு 5 ரன்களை வாரி வழங்கிவிட்டார்.
இதை பார்த்த ரசிகர்கள் சிலருக்கு இப்போதுதான் இப்படி ஒரு ரூல்ஸ் இருப்பதே தெரியவர, மற்ற வீரர்களோ இதைக் கண்டுட் வேடிக்கையாக சிரித்தனர். அப்படியானால் ரூல்ஸ்படி, விக்கெட் கீப்பரை தவிர வேறு யாரும் பந்தை பிடிக்கும் நோக்கில் அந்த கையுறையை அணிய கூடாது என்பதுதான் மோரல் ஆஃப் தி ஸ்டோரி. சர்வதேச கிரிக்கெட் சட்டம் 28.1-ன்படி விக்கெட் கீப்பரை தவிர வேறு எந்த வீரரும் கையுறைகள் மற்றும் வெளிப்புற லெக் கார்டுகளை அணிய அனுமதிக்கப் பட மாட்டார்கள். எனினும் இந்த 5 ரன்கள் பெனால்டியால் பாகிஸ்தான் அணி பாதிக்கப்படவில்லை. ஒருவேளை இரண்டு அணிகளின் ரன்களும்ம் நெருக்கமாக இருந்திருந்தால், பாகிஸ்தான் அணியின் வெற்றியை, இந்த பெனால்டி ரன்கள் பாதித்திருக்கும்.
இப்படி 2வது ஒருநாள் போட்டி முடிய, அதன் பின்னர் நடந்த 3வது ஒருநாள் போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி 3-0 என்கிற கணக்கில் பாகிஸ்தான் வென்று தொடரை கைப்பற்றியது. அதன் பின்னர் பேசிய பாபர் அசாம், “ஒரு அணியாக நாங்கள் திட்டமிட்டதை ஆடினோம். 100 வீதம் உழைப்பை கொடுத்தோம். அணியில் இருக்கும் அனைவருக்கும் வாய்ப்பளித்து பரிசோதித்து பார்க்கிறோம்.
தொடக்க ஆட்டத்தில் இருந்தே கவனம் தேவை. ஃபீல்டிங்கில் இன்னும் முன்னேற்றம் தேவை. பிழைகளில் இருந்து கற்றுக்கொள்வோம். பார்ட்னர்ஷிப் தான் இந்த தொடரில் முக்கியமானதாக அமைந்தது. உறுதுணையாக இருந்த முல்தான் மக்களுக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: திடீரென மைதானத்துக்குள் நுழைந்து சல்யூட் அடித்த ரசிகர்.. உடனே பாகிஸ்தான் வீரர் செய்த செயல்.. வைரல் வீடியோ..!
- பந்து பேட்லயே படல.. ஆனாலும் 3 ரன் ஓடிய பேட்ஸ்மேன்கள்.. மாத்தி மாத்தி பந்தை கோட்டைவிட்ட ஃபீல்டர்ஸ்.. வைரலாகும் வீடியோ..!
- ‘கிரேட் எஸ்கேப் ஆன ரிஷப் பந்த்’.. இல்லன்னா கேப்டனா முதல் மேட்சே மோசமான ரெக்கார்ட்டா மாறியிருக்கும்..!
- கடைசி ஓவர்ல ஏன் பாண்ட்யா அப்படி பண்ணார்..? தினேஷ் கார்த்திக் அதிருப்தி.. கடுப்பான நெட்டிசன்கள்..!
- வைரலாகும் ஆஷிஷ் நெஹ்ராவின் இன்ஸ்டாகிராம் page… அப்படி அதுல என்ன இருக்கு?
- "எனக்கு ஆட்டநாயகன் விருது வேணாம்".. பகீர் கிளப்பிய பாகிஸ்தான் கேப்டன்.. காரணம் தெரிஞ்சதும் நெகிழ்ந்துபோன கிரிக்கெட் ரசிகர்கள்..வைரல் வீடியோ.!
- பேட்டிங் பயிற்சியின் போது நடந்த சம்பவம்.. குல்தீப் யாதவ்க்கு காயம் .. BCCI வெளியிட்ட முக்கிய தகவல்
- இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட K L ராகுல்.. புதிய கேப்டனான ரிசப் பண்ட்! வெளியான பிண்ணனி தகவல்
- அதிவேகமாக பந்து வீசி அக்தர் & பிரெட் லீ சாதனையை முறியடித்த இந்திய வீரர்.. எவ்வளவு வேகம் தெரியுமா?
- Breaking: ஓய்வை அறிவித்தார் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான மித்தாலி ராஜ்..அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்..!