குறுக்க போய்டாதீங்க சார்.. ரன் ஓடும் போது எதிரே நின்ன பிரபல பாகிஸ்தான் பவுலர்.. டக்குன்னு பேட்டை ஓங்கிட்டாரு மனுஷன்😂.. வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் பாபர் அசாம் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி ஆகியோர் போட்டி நடக்கும் போது களத்தில் வேடிக்கையான செயலில் ஈடுபட்டனர்.

Advertising
>
Advertising

                              Images are subject to © copyright to their respective owners.

Also Read | "இந்தியாலதான் நான் சம்பாதிச்சேன்.. தொடர்ந்து படங்கள் FLOP .. அதனால".. பிரபல நாட்டின் குடியுரிமையை துறந்த அக்சய் குமார்..!

நேற்று வியாழன் அன்று நடைபெற்ற போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் பெஷாவர் ஜல்மி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

இந்த போட்டியில் ஹசன் அலி 3-35 என்ற கணக்கில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். கேப்டன் பாபர் ஆசாம் ஆட்டமிழக்காமல் 75 ரன்கள் எடுத்து 156-8 என்ற ரன்களை எடுக்க உதவினார், குர்பாஸ், ஜேம்ஸ் நீஷம் தவறவிட்ட இரண்டு கேட்சுகளைப் பயன்படுத்தி 24 பந்துகளில் தனது அரை சதத்தை அடித்தார், இதன்மூலம் இஸ்லாமாபாத் 31 பந்துகள் மீதமிருந்த நிலையில் 159-4 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

Images are subject to © copyright to their respective owners.

இஸ்லாமாபாத் நான்கு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. முதல் இடத்தில் உள்ள முல்தான் சுல்தான்ஸ் ஐந்து ஆட்டங்களில் எட்டு புள்ளிகள் பெற்றுள்ளனர். இஸ்லாமாபாத் அணி இன்று வெள்ளிக்கிழமை குவெட்டா கிளாடியேட்டர்ஸை எதிர்கொள்கிறது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலியை தனது கிரிக்கெட் பேட்டால்  அவரை அடிப்பது போல் பாசாங்கு செய்து பயமுறுத்த முயன்ற வீடியோ காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.

பாபர், பேட்டிங் செய்யும் போது ஹசன் அலி பந்துவீச்சை எதிர்கொண்டார். ஒரு  ரன் எடுக்க போகும் போது ஹசன் பிட்ச் நடுவில் வர, பாபர் ஹசனை  தனது பேட் மூலம் அடிப்பது போல் பாசாங்கு செய்து பயமுறுத்தினார். உடனே ஹசன் அலி கவர் திசை நோக்கி ஓடும் காட்சிகள் கேமராவில் பதிவாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

இந்த போட்டியில் ஹசன் அலி  ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Also Read | "5000 வருசம் முன் இந்து பெண்களை கடத்திட்டு போயிருக்காங்க".. 'எதிர்நீச்சல் அப்பத்தா' ஞானம் பரபரப்பு பேட்டி!

CRICKET, BABAR AZAM, HASAN ALI, BABAR AZAM AND HASAN ALI FUNNY INCIDENT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்