தோத்து போறதுல 'வெட்கப்பட' என்ன இருக்கு...? கேப்டனா இருந்திட்டு 'இப்படி' பண்ணலாமா...? உங்களுக்கு தாங்க அந்த 'ரெஸ்பான்ஸிபிலிட்டி' இருக்கு...! - கண்டித்த முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் நிலை குறித்து மக்கள் தெரிந்துக் கொள்ள விராட் தான் நேரடியாக பேசவேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் கடிந்துள்ளார்.

Advertising
>
Advertising

டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி மீது ரசிகர்கள் மட்டுமல்லாது, பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், நெட்டிசன்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இதுவரை இந்தியா ஆடிய போட்டிகளில் எதிலும் வெற்றியடையவில்லை. வெல்ல வேண்டிய போட்டியில் கூட மிக மோசமாக தோல்வியை சந்தித்தது.

அதோடு, கிரிக்கெட்டில் அதிகம் கவனம் பெறதா நமீபியா கூட 2 புள்ளிகள் பெற்ற நிலையில் இந்திய அணி இன்னும் ஒரு புள்ளியைக் கூட பெறாமல் இருக்கிறது.

இந்நிலையில், இந்தியா நியூசிலாந்து அணி கிரிக்கெட் தொடரில் இந்தியா தோல்வியை தழுவிய நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பத்திரிக்கையாளர் சந்திப்பை புறம் தள்ளினார். அவருக்கு பதில் ஜஸ்பிரித் பும்ரா பத்திரிக்கையாளர் கேள்விகளுக்கு பதில் அளித்த சம்பவம் ஊடகவியலாளர்கள், கிரிக்கெட் நெட்டிசன்கள், முன்னாள் வீரர்கள் என பலருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன், 'போட்டியில் வெற்றி தோல்வி என்பது நடக்க கூடியது தான். தோற்பதில் ஒன்றும் வெட்கப்பட வேண்டியதில்லை. ஆனால், தோற்றபின் வந்து பேசுவது தான் சரியாக இருக்க முடியும்.

நம் இந்திய அணியின் தோல்விக்குக் காரணம் என்ன என்பதை மக்கள் அறிய வேண்டும். அதை கேப்டன் தான் சொல்லவேண்டும். அதைவிட்டு விட்டு பும்ரா பேசுவதும் கோச் வந்து பேசுவதும் கேப்டன் பேசுவதற்கு இணையாகாது.

இதுபோன்ற செயல் தேவையற்ற வதந்திகளை கிளப்பிவிடும். விராட் கோலி தேசிய ஊடகங்களை சந்தித்தாக வேண்டும். மக்களுக்கு தோல்விக்கு ஆன காரணங்களை நீங்கள் தான் நேரடியாக சொல்ல வேண்டும். கிரிக்கெட்டிற்கும் மக்களுக்கும் தொடர்பை ஏற்படுத்த பலமாக இருப்பது பத்திரிகைகள் தானே, இதைப் புறக்கணிக்கலாமா?' என சாடியுள்ளார் அசாருதீன்.

VIRATKOHLI, VIRAT KOHLI, AZHARUDDIN, T20

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்