ஒரே டவுட்டா இருக்கே.. ரெண்டு பேரும் இப்படி பண்ற ஆட்கள் கிடையாதே.. சந்தேகம் எழுப்பும் முன்னாள் கேப்டன்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இடையே மறுபடியும் பிளவு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

Advertising
>
Advertising

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய டி20 அணிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகினார். இதனை அடுத்து தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் திடீரென ஒருநாள் கிரிக்கெட் அணிக்கும் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இது விராட் கோலி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக விராட் கோலி சம்மதம் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால் பிசிசிஐ மீது அவர் அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில் இந்திய அணி வரும் 26-ம் தேதி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது.

இதில் ரோகித் சர்மா காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. அதேபோல் விராட் கோலி ஒருநாள் தொடரில் பங்கேற்க மாட்டார் என சொல்லப்படுகிறது. தனது மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாட உள்ளதால் அதற்காக பிசிசிஐயிடம் விராட் கோலி விடுப்பு கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க முடியாததை கோலி தெரிவித்துள்ளார். டெஸ்ட் தொடரில் விளையாட முடியாததை ரோஹித் சர்மாவும் தெரிவித்துள்ளார். ஓய்வு எடுப்பதில் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் அதற்கான நேரம்தான் சரியாக இல்லை. இருவருக்கும் இடையிலான உறவு குறித்த யுகங்கள் இந்த செயல்கள் மூலம் சந்தேகத்தை எழுப்புகிறது. இருவருமே டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டை விட்டுக் கொடுக்காதவர்கள்’ என முகமது அசாருதீன் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்