தொடர் தோல்வி ஏற்பட்டால் ‘கேள்வி’ கேட்கதான் செய்வாங்க.. அதுக்காக இப்படியா பண்ணுவீங்க.. சரமாரியாக ‘கேள்வி’ எழுப்பிய முன்னாள் கேப்டன்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த பின் விராட் கோலி செய்தியாளர்களை சந்திக்காதது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

Advertising
>
Advertising

ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி, தாங்கள் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. அதிலும் பாகிஸ்தானுக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்திலும், நியூஸிலாந்துக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்திலும் மோசமாக தோல்வியடைந்துள்ளது.

இனி ஆப்கானிஸ்தான், நம்பீயா மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய மூன்று அணிகளுடன் இந்தியா விளையாட உள்ளது. இந்த மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றாலும், அரையிறுதிக்கு இந்தியா செல்வது சந்தேகம்தான் என சொல்லப்படுகிறது.

இந்த சூழலில், நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தபின் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி (Virat Kohli) செய்தியாளர்களை சந்திக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக ஒவ்வொரு போட்டி முடிந்ததும் அணியின் கேப்டன் செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம். அப்படி அவர்களால் வர முடியவில்லை என்றால், தலைமை பயிற்சியாளரோ அல்லது துணைக்கேப்டனோ செய்தியாளர்களை சந்திப்பார்கள். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார்.

இதற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் (Mohammad Azharuddin) கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த பின் ஏன் விராட் கோலி செய்தியாளர்கள் சந்திப்புக்கு வரவில்லை? வெற்றி பெற்றால் மட்டும்தான் செய்தியாளர்களை சந்திப்பீர்களா?

கோலி வரவில்லை என்றால் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியாவது வந்திருக்க வேண்டும். ஆனால் இவர்கள் இருவரும் வராமல் பும்ராவை அனுப்பியுள்ளனர். தொடர் தோல்வி ஏற்பட்டால் கேள்வி எழத்தான் செய்யும். அதில் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இது மிகவும் தவறான ஒன்று’ என முகமது அசாருதீன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

VIRATKOHLI, TEAMINDIA, T20WORLDCUP, INDVNZ, AZHARUDDIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்