'எதிர்காலத்தில இந்திய அணியின் கேப்டன் ஆவாரு!.. அதுக்கு நிறைய வாய்ப்பிருக்கு'!.. அவரோட 'அந்த' குணம்... இந்திய அணிக்கு செம்ம பலம்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் வருங்கால கேப்டன் குறித்து ஆரூடம் கூறியுள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன்.

ஐபிஎல் 2021 தொடர் துவங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அனைத்து அணிகளும் மும்முரமாக தயாராகி வருகின்றன. ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரிஷப் பண்ட் தேர்வாகியுள்ளார்.

இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் ஆப்ஷனாக வருங்காலத்தில் இருக்கக்கூடிய வீரர் குறித்து முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தன்னுடைய கருத்தை வெளியிட்டுள்ளார்.



ஐபிஎல் 2021 தொடர்  8 தினங்களில் துவக்கம்  ஐபிஎல் 2021 தொடர் துவங்க இன்னும் 8 தினங்களே உள்ளன. இந்த தொடரில் கோப்பையை வெல்ல அனைத்து அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. தினந்தோறும் பல்வேறு மாற்றங்கள் அணிகளில் நிகழ்ந்து வருகின்றன. புதிய வீரர்கள் இணைக்கப்படுகின்றனர். ஏற்கனவே உள்ளவர்கள் வெளியேறுகின்றனர்.  

கடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் காயம் காரணமாக டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் விலகியுள்ளார். இதையடுத்து தற்போது அணியின் புதிய கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக இந்திய அணியில் சிறப்பான செயல்பாட்டை அளித்துவரும் அவர் டெல்லி கேபிடல்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்நிலையில், ரிஷப் பண்ட் வருங்காலத்தில் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிற்கான தேர்வாக இருக்க வாய்ப்புள்ளதாக முன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாருதீன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடந்த மாதங்களில் அவர் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளதாகவும், அனைத்து வடிவங்களிலும் தன்னை மேம்படுத்தியுள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.  

மேலும், அவரது அதிரடி ஆட்டம் இந்தியாவை இன்னும் மேம்படுத்தும் என்றும், அசாருதீன் குறிப்பிட்டுள்ளார். இதே கருத்தை டெல்லி கேபிடல்ஸ் அணியின் கோச் ரிக்கி பாண்டிங்கும் தெரிவித்துள்ளார். ஐபிஎல்லில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை ரிஷப் ஏற்றுக்கொண்டதன் மூலம் அவரது பேட்டிங் மேலும் மேம்படும் என்று அவர் கூறியுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்