"அட, 'கோலி'யோட டீம்'லயே அவருக்கு இப்டி ஒரு தீவிர ரசிகனா??..." 'ஆர்சிபி' வீரரின் அசத்தல் 'ஆசை'... 'எமோஷ்னல்' ஆன 'ரசிகர்கள்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

14 ஆவது ஐபிஎல் சீசன் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் இதற்காக விரைவில் தயாராகவுள்ளது.

மறுபக்கம், ரசிகர்களும் ஐபிஎல் போட்டிகளை எதிர்பார்த்து காத்து வருகின்றனர். இந்த தொடருக்கான மினி ஏலம், கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் வைத்து நடைபெற்றிருந்த நிலையில், கேரள வீரர் முகமது அசாருதீன் என்பவரை பெங்களூர் அணி, அவரது அடிப்படை தொகையான 20 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக நடைபெற்றிருந்த சையது முஷ்டாக் அலி தொடரில், 54 பந்துகளில் 137 ரன்கள் எடுத்து அசாருதீன் அசத்தியிருந்தார். அப்போதிலிருந்தே, இவர் ஐபிஎல் தொடரிலும் நிச்சயம் பங்குபெறுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். அதன்படி, பெங்களூர் அணி அவரை ஏலத்தில் வாங்கியது. அடிப்படை தொகைக்கு அவரை வாங்கினாலும், அவர் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஐபிஎல் தொடரில் ஏற்படுத்துவார் என ரசிகர்கள் கருதுகின்றனர்.

மேலும், தான் விராட் கோலியின் தீவிர ரசிகர் என்பதால், அவரது தலைமையிலான பெங்களூர் அணியில் இணைந்ததன் மூலம், மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளார் அசாருதீன். ஐபிஎல் குறித்து அசாருதீன் கூறுகையில், 'கிரிக்கெட்டில் எனக்கு முன்னுதாரணமான கோலியுடன் இணைந்து ஆடவுள்ளது கனவு நிஜமாகும் தருணமாக உள்ளது.


ஆர்சிபி அணியில், கோலியைப் போல பயமின்றி ஆட வேண்டும். எனது ஃபார்மை சிறந்த முறையில் கடைபிடிக்க வேண்டும். இந்த சீசன் எனக்கு கற்றுக் கொள்ளக் கூடிய சீசனாக இருக்கும்' என்றார்.

மேலும், 'சில போட்டிகளில் ஆட எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். அப்படி வாய்ப்பு கிடைத்தால், தேவ்தத் படிக்கலுடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்க ஆசைப்படுகிறேன். இந்திய அணிக்காக ஆட வேண்டும் என்பது தான் என்னுடைய கனவு. ஆனால், தற்போது ஆர்சிபி அணியில் எனது பங்கை சிறப்பாக ஆற்ற வேண்டும் என்பதே எனது நோக்கம்' என அவர் கூறியுள்ளார்.

கோலி தலைமையிலான பெங்களூர் அணியில், அவரைப் போல ஐபிஎல் போட்டிகளில் பயமின்றி ஆடி, நல்ல வீரராக வர வேண்டும் ஆன ஆசைப்படும் அசாருதீனைக் கண்டு பெங்களூர் ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்