VIDEO: ஆஸ்திரேலிய மண்ணில் ‘கெத்தா’ பறந்த இந்திய கொடி.. 70 வருட சாதனையை திருத்தி எழுதிய இந்திய ‘இளம்படை’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்தியா-ஆஸ்திரேலிய அணிக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. அதில் இந்திய அணி வெற்றி பெற 328 ரன்களை இலக்காக ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்து. இதனைத் தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்தது. இதில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் சர்மா 7 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த புஜாரா மற்றும் சுப்மன் கில் நிதானமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.

இதில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில் 91 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இதனை அடுத்து வந்த கேப்டன் ரஹானே 24 ரன்களில் அவுட்டாக, அடுத்ததாக விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் களமிறங்கினார்.

பரபரப்பாக சென்றுகொண்டிருந்த ஆட்டத்தில் ரிஷப் பந்த் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார். அப்போது திடீரென மயங்க் அகர்வால் அவுட்டாக, அடுத்த வந்த வாசிங்டன் சுந்தருடன் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். இந்த நிலையில் 7 விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் எடுத்து இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதில் ரிஷப் பந்த் 89 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது.

இன்றைய ஹப்பா டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 70 வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன்களை சேஸ் (329/7) செய்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது. முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த 1951-ம் ஆண்டு 236/7 ரன்களை சேஸ் செய்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்