24 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் மண்ணில் ஆஸ்திரேலியா… நாளை தொடங்குகிறது முதல் டெஸ்ட்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலிய அணி 24 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் மண்ணில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் நாளை முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது.

Advertising
>
Advertising


24 ஆண்டுகளுக்கு முந்தைய தொடர்:

கிரிக்கெட் உலகில் பல வருடங்களாக கோலோச்சி வரும் அணிகளில் ஆஸ்திரேலியாவும் பாகிஸ்தானும் முன்னணியில் உள்ளவை. இரு அணிகளுமே சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்கி கிரிக்கெட் உலகுக்கு அளித்தவை. அதே போல இரு நாட்டு அணி வீரர்களும் களத்தில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர்கள். இந்நிலையில் நாளை பாகிஸ்தானின் ராவல்பிண்டி மைதானத்தில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் மோத உள்ளன. பாகிஸ்தான் மண்ணில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸி சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடும் முதல் தொடர் இதுவாகும்.


2009- ல் நடந்த தாக்குதல்


கடைசியாக ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு 1988 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சென்று டெஸ்ட் தொடரில் விளையாடி 1-0 என்ற கணக்கில் வெற்றியோடு திரும்பியது. அதன் பின்னர் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சென்றதே இல்லை. அதற்குக் காரணம் 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை வீரர்களின் பேருந்துகளின் மேல் பயங்கரவாதிகள் துப்பாக்கி தாக்குதல் நடத்தியதே. அந்த தாக்குதலில் எந்த வீரருக்கும் பாதிப்பு இல்லை என்றாலும் அதன் பிறகு பெரும்பாலான நாடுகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. சமீபத்தில் கூட நியுசிலாந்து அணி பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விளையாட செல்ல கடைசி நேரத்தில் மறுத்தது.

சமீபத்தைய ஆண்டுகளில் மாற்றம்:


இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஐக்கிய அரபுகள் எமிரேட்ஸ் மைதானங்களில் தங்கள் போட்டிகளை நடத்தி வந்த நிலையில் இப்போது தங்கள் நாட்டிலேயே நடத்தத் தொடங்கியுள்ளது இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகதான் பாகிஸ்தான் மண்ணில் அணிகள் சென்று விளையாடுவது அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் ஜிம்பாப்வே, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், பங்களாதேஷ் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டன.


அதுபோலவே இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தும் பி எஸ் எல் லீக் தொடரில் பல நாட்டு வீரர்களும் வந்து கலந்துகொள்கின்றனர். இதையடுத்து இப்போது ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி 20 போட்டியில் விளையாட உள்ளது. நாளை இவ்விரு அணிகளும் மோதும் முதல்  டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடக்க உள்ளது.

இந்தியா பாகிஸ்தான் போட்டிகள்:

கிரிக்கெட் விளையாடும் நாடுகள் கிட்டத்தட்ட அனைத்தும் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடிவிட்ட நிலையில் இன்னும் இந்திய அணி, பாகிஸ்தானுக்கோ அல்லது பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கோ சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவில்லை. ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை மற்றும் ஆசியக் கோப்பை போன்ற போட்டிகளில் மட்டுமே விளையாடிவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

AUS VS PAK, PAKISTAN CRICKET, AUSTRALLIA CRICKET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்