VIDEO: என்ன தான் 'சந்தோசம்'னாலும் அதுக்காக இப்படியா...? கப் ஜெயிச்ச உடனே 'அந்த 3 பேரும்' என்ன 'பண்றாங்க' பாருங்க...! - வைரலாகும் வீடியோ...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வெற்றிபெற்ற சந்தோஷத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் செய்த காரியம் வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

ஐக்கிய அமீரகத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணியுடன் மோதிய ஆஸ்திரேலிய அணி அபாரமாக ஆடி கோப்பையை வென்றது.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு  172 ரன்கள் அடித்தது. 173 ரன்கள் என்ற கடின இலக்கை வெல்ல களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் 38 பந்துகளில் 53 ரன்கள் குவித்து சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்தார்.

இறுதியில் 18.5 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 8  விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதல் முறையாக உலகக்கோப்பையை வென்றது.

டி-20 உலகக்கோப்பையில் முதல் வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலிய வீரர்கள் தங்கள் ஓய்வு அறையில் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதில், குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் மற்றும் ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஆகியோர் ஷூவில் பீர் ஊற்றி குடித்து கும்மாளமிட்டனர்.

அவர்கள் மூவரும் ஷூவில் பீர் ஊற்றி குடித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

BEER, SHOE, AUSTRALIAN TEAM PLAYERS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்