உடல்நலக் குறைவால்.. ‘கொரோனா’ பரிசோதனைக்குப் பின்... ‘தனிமைப்படுத்தப்பட்டுள்ள’ ஆஸ்திரேலிய ‘கிரிக்கெட்’ வீரர்...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கேன் ரிச்சர்ட்சன் உடல்நலக் குறைவால் கொரோனா பரிசோதனைக்குப் பின் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவிட்டு சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளது. இதையடுத்து அந்த அணி தற்போது நியூசிலாந்து அணியுடன் ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன்னுக்கு திடீரென தொண்டை வலி ஏற்பட்டுள்ளது. மேலும் அவருக்கு உடல்நலமும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். பரிசோதனை முடிவுகள் வெளியான பிறகே அவருடைய உடல்நலம் குறித்து தெரியவரும் எனக் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்துப் பேசியுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், “கேன் ரிச்சர்ட்சன்னுக்கு எங்களுடைய மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்துள்ளனர். அதன்பிறகு அவர் அணியில் உள்ள மற்ற வீரர்களிடம் இருந்து தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார்” எனக் கூறியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கை தட்டல்கள்', 'ஆரவாரங்கள்' இல்லாமல் ... சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ... முதல் முறையாக நடந்த சம்பவம் !
- 'கைய நல்லா கழுவ சொல்றீங்க'... 'சென்னையில தண்ணீருக்கு எங்க போவோம்'?... ஐகோர்ட்டில் வழக்கு!
- 'கனடா பிரதமரின் மனைவிக்கு கொரோனா'?... 'அதிர்ச்சியில் மக்கள்'... வைரலாகும் ட்விட்டர் பதிவு!
- ‘ஸ்பெஷல் தரிசனம் டிக்கெட் புக் செய்தவர்களுக்கு’... ‘திருப்பதி தேவஸ்தானத்தின் அதிரடி புதிய தகவல்’!
- நல்லவேளை 'இந்தியாவுல' கொரோனா உருவாகல... 'மட்டம்' தட்டிய பொருளாதார நிபுணர்... வெடித்தது புது சர்ச்சை!
- ‘கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்க ரெண்டு வழிதான் இருக்கு...’ ‘மருந்து கண்டுபிடிக்க கண்டிப்பா...’ மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்...!
- VIDEO: 'ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட 1 லட்சம் முகமூடிகளை... கழுவி, காயவைத்து மீண்டும் விற்பனை!'... கொரோனாவால் ஏற்பட்ட முகமூடி தட்டுப்பாடு!... இளைஞர் செய்த பதைபதைக்க வைக்கும் காரியம்!
- VIDEO: 'கொரோனா கண்காணிப்பு முகாம்' இடிந்து விழுந்து... 26 பேர் பலி!... இதயத்தை ரணமாக்கும் சோகம்!
- 'பல்லாயிரம்' மக்கள் திரண்டிருந்த மைதானம் ... ஒருவருக்கு உறுதி செய்யப்பட்ட கொரோனா ...
- ஒரே ‘போன்’ கால் தான்... பதறிப்போய் ‘3 நாட்களுக்கு’ மொத்த அலுவலகத்தையும் இழுத்து ‘மூடிய’ நிர்வாகம்... ‘கடைசியாக’ காத்திருந்த ‘அதிர்ச்சி’ ட்விஸ்ட்...