44 வருஷ ரெக்கார்ட்.. சல்லி சல்லியா நொறுக்கிய உஸ்மான் கவாஜா.. வைரல் பின்னணி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் புதிய சாதனையை படைத்திருக்கிறார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின்.

Advertising
>
Advertising

                                Images are subject to © copyright to their respective owners.

Also Read | வீட்டு வாசல்ல நடந்த தகராறு.. வேடிக்கை பார்க்க போன வாலிபருக்கு நேர்ந்த சோகம்..!

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரண்டிலுமே இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது. இதனையடுத்து இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது. இதனால் 2-1 என்ற நிலையில் டெஸ்ட் தொடரில் இந்திய அணி முன்னிலை பெற்றிருக்கிறது. இருப்பினும், கடைசி டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என்ற ஆர்வம் ரசிகர்களுக்கு மத்தியில் எழுந்துள்ளது.

நான்காவது டெஸ்ட்

இந்த சூழ்நிலையில் இரு அணிகளுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று துவங்கி இருக்கிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

Images are subject to © copyright to their respective owners.

இதனையடுத்து முதல் இன்னிங்க்ஸை துவங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். முதல் இன்னிங்ஸில் அந்த அணி 480 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அந்த அணியின் உஸ்மான் கவாஜா 180 ரன்களையும், க்ரீன் 114 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணியின் ஷமி 2 விக்கெட்டுகளையும், அஸ்வின் 6 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் தலா ஒரு விக்கெட்களையும் வீழ்த்தினர்.

உஸ்மான் கவாஜா சாதனை

இந்த போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே உஸ்மான் கவாஜா மிகுந்த பொறுமையுடன் ஆடினார். முதல் நாள் முடிவில் 104 ரன்களுடன் இருந்த அவர் இன்றும் (வெள்ளிக்கிழமை) நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 393 வது பந்தை சந்தித்தபோது புதிய சாதனையையும் படைத்தார். அதாவது இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் அதிக பந்துகளை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை கவாஜா படைத்திருக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.

முன்னதாக கடந்த 1979 ஆம் ஆண்டு நடைபெற போட்டியில் ஆஸ்திரேலியாவின் கிரஹாம் யல்லோப் 392 பந்துகளை சந்தித்திருந்தார். இதன்மூலம் 44 வருட சாதனையை கவாஜா தற்போது முறியடித்திருக்கிறார். 180 ரன்களில் அவுட்டான அவர் மொத்தமாக 413 பந்துகளை சந்தித்திருந்தார். முன்னதாக 2017 ஆம் ஆண்டு ராஞ்சியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஸ்மித் 361 பந்துகளை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | டிக்கெட் எடுக்கும்போது அவசரம்.. நாடே மாறிப்போச்சு.. தோழியுடன் டூர் கிளம்பியவருக்கு அடுத்தடுத்து காத்திருந்த அதிர்ச்சி..!

CRICKET, AUSTRALIAN BATTER, USMAN KHAWAJA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்