ரகசிய உறவில் இருந்த ஷேன் வார்னே??.. அஞ்சு மாசத்துக்கு அப்புறம் ஆஸ்திரேலிய பெண் சொன்ன பரபரப்பு 'தகவல்'

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சுழற்பந்து வீச்சில் ஜாம்பவானுமான ஷேன் வார்னே, தன்னுடைய 52 வயதில் கடந்த மார்ச் மாதம் உயிரிழந்த விஷயம், கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரையும் கடும் துயரத்தில் ஆழ்த்தி இருந்தது.

Advertising
>
Advertising

Also Read | "இதுக்கு அப்புறமும் பாம்புக்கு கால் இல்லன்னு சொல்லுவீங்க?!" அடடே போட வைத்த கண்டுபிடிப்பு.. மிரள வைத்த 'வாலிபர்'!!

தாய்லாந்தில், தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருந்த வார்னே, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

வார்னே ஆடிய காலத்தில் ஆடிய கிரிக்கெட் வீரர்கள், ஷேன் வார்னேவுடனான அழகான நினைவுகளை அந்த சமயத்தில் உருக்கத்துடன் பகிர்ந்து கொண்டிருந்தனர். இன்றும் ஷேன் வார்னேவின் மறைவு, ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலருக்கும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும் நிலையில், தற்போது ஷேன் வார்னே குறித்து வெளியான கருத்து ஒன்று, சற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

"உலகின் Hottest பாட்டி" என தனது சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டுள்ளவர், ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் ஜினா ஸ்டீவர்ட். 51 வயதாகும் இவர், ஷேன் வார்னே இறந்து சுமார் ஐந்து மாதங்களுக்கு பிறகு, அவர் குறித்த விஷயம் ஒன்றை கூறி உள்ளார்.

இது தொடர்பாக பேசியுள்ள ஜினா, "கோல்டு கோஸ்ட் பகுதிக்கு வார்னே வந்த போது, நாங்கள் சந்தித்து கொண்டோம். இரவு முழுவதும் நாங்கள் ஒன்றாக பேசி, ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டோம். அப்போது, அவர் ஒரு சுவாரஸ்யமான நபர் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். அவரது வாழ்க்கை பற்றிய விஷயம் எனக்கு மிகவும் பிடித்து போனது. நாங்கள் இருவரும் மிகவும் நெருக்கம் ஆனோம். மேலும், எங்களுக்குள் இருந்த உறவு பற்றி, ஒரு போதும் வெளியே சொல்ல மாட்டேன் என அவருக்கு நான் சத்தியம் செய்திருந்தேன்.

நாங்கள் ஒன்றாக இருந்த போது, எங்களை புகைப்படம் எடுக்க சிலர் முயன்றனர். ஆனால், நாங்கள் வெளியே சுற்றித் திரியும் போது, கண்ணாடி மற்றும் தொப்பி உள்ளிட்டவற்றைக் கொண்டு ஒளிந்த படி சென்று வருவோம். தாய்லாந்து செல்வதற்கு முன்பு கூட என்னிடம் பேசினார். என்னுடன் பேசினால் நிம்மதியாக இருக்கும் என வார்னே அடிக்கடி கூறுவார்.

வார்னே மறைவுக்கு பின், கடந்த சில மாதங்களாக நான் நிலைகுலைந்து போயிருந்தேன். ஒரு ஜாம்பவானை இந்த உலகம் இழந்து விட்டது. ஒரு சிறந்த நண்பர் மற்றும் நம்பிக்கையாளரை நான் இழந்து விட்டேன். நான் வார்னேவுடன் டேட்டிங் செய்துள்ளேன். எங்களுக்குள் இருந்த உறவு, பெர்சனலாக இருக்க வேண்டும் என்று தான் வார்னே கூறுவார். முதல் முறையாக இதனை இப்போது தான், நான் பொது வெளியில் தெரிவிக்கிறேன். அவரது விருப்பத்திற்கு கட்டுப்பட்டு தான் இருப்பேன். தற்போது அவர் சிறந்த மனிதர் என்பது அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக இதனை தெரிவித்துள்ளேன்" என ஜினா கூறி உள்ளார்.

Also Read | தான் வளர்த்த நபர் மீது காதல்.. திருமணம் செய்து 2 ஆண்டுக்கு பிறகு.. வெளியான தகவல்!

AUSTRALIA WOMAN, SECRET, SHANE WARNE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்