கவாஸ்கர், ரவி சாஸ்திரி பலரும் இங்க சாப்ட்டு தான் மேட்ச் ஆட போவாங்களாம்.. வைரலாகும் ஆஸ்திரேலிய தமிழ் 'தம்பதி'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

8 வது டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர், தற்போது ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெற்று வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | "அவரு டி 20ல இருந்து Retire ஆகணும், ஏன்னா".. கோலி பத்தி அக்தர் சொன்ன விஷயம்!!

முதல் சுற்றில் இருந்து இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

தொடர்ந்து, தற்போது சூப்பர் 12 சுற்றில் ஒவ்வொரு போட்டிகளும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனால், அரை இறுதியில் எந்தெந்த அணிகள் முன்னேறும் என்பதை தெரிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, சூப்பர் 12 சுற்றில் தங்களின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக த்ரில் வெற்றி பெற்றிருந்தது. இதற்கு அடுத்தபடியாக, தங்களின் இரண்டாவது போட்டியில் நெதர்லாந்து அணியை நாளை (27.10.2022) சந்திக்க உள்ளது இந்திய அணி.

இந்த நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் மற்றும் தொகுப்பாளினி பாவனா ஆகியோர், மெல்போர்னில் உள்ள வீடு ஒன்றில் சென்றுள்ள வீடியோ தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவின் 32 மார்ஷல் தெரு பகுதியில் உள்ள வீட்டிற்கு அவர்கள் சென்றுள்ளனர். டாக்டர் உமாபதி மற்றும் அவரது மனைவி தீனா ஆகியோர் தங்கி இருக்கும் இந்த வீடு, இந்திய கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் மிகவும் ஸ்பெஷலான ஒன்றாகும். அதாவது சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்த்ரி, ஸ்ரீகாந்த், சச்சின் உள்ளிட்ட பல இந்திய கிரிக்கெட் வீரர்கள், ஆஸ்திரேலியா சென்றால் உமாபதி வீட்டில் நிச்சயம் போய் விட்டு தான் கிரிக்கெட் தொடர் ஆடுவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஸ்ரீகாந்த் மற்றும் பாவனா ஆகியோரிடம் பல சுவாரஸ்ய தகவல்களையும் உமாபதி மற்றும் அவரது மனைவி தீனா ஆகியோர் பகிர்ந்து கொண்டனர். பல இந்திய வீரர்கள் ஆட்டோகிராப் போட்ட கிரிக்கெட் பேட் உள்ளிட்ட பல விஷயங்களையும் இந்த வீடியோவில் உமாபதி காட்டி இருந்தார். கிரிக்கெட் ரசிகர்கள் இடையே Nostalgiac தருணங்களை வர வைக்கும் இந்த வீடியோ, பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

 

Also Read | ரெயில்வே டிக்கெட் மாதிரியே 'கல்யாண' அழைப்பிதழ்.. இதுல PNR நம்பர் இதுவா..? வேற லெவல்.‌

AUSTRALIA SRIKKANTH, INDIAN PLAYERS, HOUSE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்