டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே ‘மோசமான’ ரெக்கார்டு.. அது ரன்னா இல்ல போன் நம்பரா..? சரமாரியாக கிழித்த ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமான சாதனையை படைத்துள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை அடிலெய்டு மைதானத்தில் பகலிரவு போட்டியாக இந்திய அணி விளையாடி வருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 244 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் கோலி 74 ரன்களை எடுத்தார். இதனைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி, இந்திய வீரர்களின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி விளையாடியது. ஆரம்பம் முதலே சொதப்பிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ப்ரீத்வி (4) மற்றும் மயங்க் அகர்வால் (9) அடுத்தடுத்து அவுட்டாகினர். இதனை அடுத்து வந்த பும்ரா 2 ரன்னில் அவுட்டாகினார்.

இதனைத் தொடர்ந்து வந்த புஜாரா அணியை சரிவில் இருந்து மீட்பார் என நம்பிய நிலையில் டக் அவுட்டாகி அதிர்ச்சிய அளித்தார். அடுத்து வந்த கேப்டன் கோலி 4 ரன்னில் அவுட்டானது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து வந்த இந்திய வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாக 36 ரன்களுக்கு இந்திய அணி 9 ரன்களை பறிகொடுத்தது. கடைசியாக வந்த முகமது ஷமிக்கு காயம் ஏற்பட்டதால், போட்டி அத்துடன் டிக்ளேர் செய்யப்பட்டது. இதில் ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை ஹசல்வுட் 5 விக்கெட்டுகளும், பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

இப்போட்டியில் மயங்க் அகர்வால் அடித்த 9 ரன்னே அதிகபட்ச ஸ்கோர். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு வீரர் கூட இரட்டை இலக்க ரன் எடுக்காதது இப்போட்டியில்தான். மேலும் இதுவரை விளையாடி போட்டிகளில் இந்திய அணி எடுத்த மிக குறைந்த ரன் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 1974ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் 42 ரன்கள் எடுத்ததே இந்திய அணியின் மிக்குறைந்த ரன்னாக இருந்தது. இந்திய வீரர்களின் ரன்களை பார்க்கும்போது செல்போன் நம்பர்களை போல உள்ளது என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்