கால் உடைந்த நிலையில் ஆஸ்திரேலியா வீரர் மேக்ஸ்வெல்.. பிறந்தநாள் பார்ட்டியில் விபத்து! மருத்துவமனையில் இருந்து அவரே வெளியிட்ட வீடியோ

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியா வீரர் மேக்ஸ்வெல் காயம் காரணமாக சில காலம் கிரிக்கெட் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

ஆஸ்திரேலியா அணி அடுத்த வாரம் தொடங்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது. இச்சூழலில் மெல்போர்னில் சனிக்கிழமை நடந்த ஒரு பிறந்தநாள் விழாவின் போது ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் காயமடைந்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெலுக்கு இடது ஃபைபுலா எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது, இந்த சீசன் முழுவதும் ஆஸ்திரேலிய அணிக்கு அவரால் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அடுத்த வாரம் தொடங்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்தும் மேக்ஸ்வெல் நீக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மேக்ஸ்வெல்லுக்கு பதிலாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் சீன் அபோட் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பிறகு, ஒருநாள் அணி கேப்டனாக தனது முதல் தொடரில் ஆஸ்திரேலிய அணியை டெஸ்ட் அணி கேப்டன் கம்மின்ஸ் கேப்டனாக வழிநடத்த உள்ளார்.

மெல்போர்னில் தனது நண்பரின் பிறந்தநாள் விழாவின் போது வீட்டின் பின்புறத்தில் மேக்ஸ்வெல் ஓடும்போது தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

"க்ளென் நல்ல மனநிலையில் இருக்கிறார், இது ஒரு துரதிருஷ்டவசமான விபத்து. க்ளென் எங்களின் ஒருநாள் & டி20 போட்டிகளில் முக்கியமான வீரர்.  அவரது சிகிச்சை மற்றும் குணமாக்கல் செயல்முறைகளுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம்" என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி கூறியுள்ளார்.

மேக்ஸ்வெல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் இருந்து தான் சிகிச்சை பெற்று வரும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ENGLAND, AUSTRALIA, GLENN MAXWELL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்