அடுத்தடுத்து ‘காயத்தால்’ வெளியேறும் வீரர்கள்.. ஒருவேளை ‘இதுகூட’ காரணமாக இருக்கலாம்.. விமர்சித்த ஜஸ்டின் லாங்கர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடரில் வீரர்கள் தொடர்ந்து காயமடைவதற்கு ஐபிஎல் தொடர் கூட காரணமாக இருக்கலாம் என ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள், டி20 மற்று  டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் தொடர்ந்து காயமடைந்து போட்டியிலிருந்து விலகி வருகின்றனர். குறிப்பாக டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள் பலர் அடுத்தடுத்து காயமடைந்து வருகின்றனர். அதனால் வரும் வெள்ளி அன்று நடைபெற உள்ள பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டிக்கு வீரர்களை தேர்வு செய்வதே இந்திய அணிக்கு சவாலான காரியமாக உள்ளது.

இந்நிலையில் வீரர்கள் தொடர் காயங்களுக்கு ஐபிஎல் தொடர் கூட காரணமாக இருக்கலாம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்த அவர், ‘ஐபிஎல் எனக்கு பிடித்தமான கிரிக்கெட் தொடர்களில் ஒன்று. இதை இளம்வீரர்கள் கிரிக்கெட்டில் தங்களை மெருகேற்றிக் கொள்ள உதவும் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளோடு நான் ஒப்பிட்டு பார்க்கிறேன். குறிப்பாக ஷார்ட் பார்மெட் கிரிக்கெட்டில் ஐபிஎல் சிறப்பானது.

அதே நேரத்தில் கொரோனா தொற்றினால் சர்வதேச கிரிக்கெட் தொடர் முடக்கியிருந்த சூழலில் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டது சரியான நேரம் இல்லையோ என தோன்றுகிறது. தொடர்ச்சியாக இந்த சீசனில் வீரர்களுக்கு ஏற்படும் காயங்களுக்கு ஐபிஎல் காரணமாக இருக்குமோ என்று யோசிக்க வைக்கிறது. இதை நாம் பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது’ என ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஐபில் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக ரோஹித் ஷர்மா ஒருநாள், டி20 மற்றும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளை மிஸ் செய்தார். அதேபோல் இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், கே.எல்.ராகுல், ஜடேஜா, விஹாரி, பும்ரா, அஷ்வின் என இந்திய வீரர்கள் இந்த தொடரில் அடுத்தடுத்து காயமடைந்துள்ளனர். ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை வார்னர், ஸ்டாய்னிஸ் மற்றும் ஃபின்ச் உள்ளிட்ட வீரர்களும் காயம் அடைந்திருந்தனர். இவர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில் விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்