இந்தியாவை எப்படியும் ஜெயிச்சே ஆகனும்.. ரொம்ப நாள் கழித்து ஆஸ்திரேலியா ODI அணியில் இடம் பிடித்த அதிரடி வீரர்.‌. முழு விவரம்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரிலும், 3 ஒரு நாள் போட்டி தொடரிலும் இந்திய அணியை எதிர்கொள்கிறது. 

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "இந்த 5 இந்திய படங்களையும் பாருங்க".. அமெரிக்காவில் பகிர்ந்த ராஜமவுளி .. List-ல வெற்றிமாறன் படமும் இருக்கு..!

அந்த வகையில் இரு அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூர் விதர்பா மைதானத்தில் நடைபெற்றது. இதில்  இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்திய அணி வீரர்களின் சுழற்பந்து வீச்சு ஆஸ்திரேலிய அணிக்கு கடும் சவாலாக இருந்தது.  இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடந்தது.

இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்குமே வாய்ப்பு இருப்பது போல தெரிந்த சூழலில், இரண்டாவது இன்னிங்சில் போட்டியே மாறி போனது. 1 ரன் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சில் ஆடி இருந்த ஆஸ்திரேலிய அணி, ஜடேஜா சூழலில் சிக்கித் தவித்தது.

Images are subject to © copyright to their respective owners.

கடைசி 28 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா அணி, 113 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 7 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் எடுத்திருந்தனர். தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, 4 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டிப் பிடித்தது. இந்த வெற்றியின் காரணமாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பையும் தக்க வைத்துக் கொண்டது இந்திய அணி.

இனி வரும் டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி வென்றே ஆக வேண்டுமென்ற சூழலில், மறுபக்கம் தொடரை வெல்லும் முனைப்பிலும் இந்திய அணி உள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆல்-ரவுண்டர்கள் க்ளென் மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜே ரிச்சர்ட்சன் காயத்திலிருந்து திரும்பியதால், அடுத்த மாதம் தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இடம் பெற்றுள்ளனர். மார்ச் 17 மற்றும் 22 க்கு இடையில் நடக்கும் 3  ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்த ஆண்டின் பிற்பகுதியில் உலகக் கோப்பைக்கான தயாரிப்பாக ஆஸ்திரேலியா கருதுகிறது. இந்த போட்டிகள் மும்பை, விசாகப்பட்டினம் மற்றும் சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

கேப்டன் பாட் கம்மின்ஸ், டேவிட் வார்னர்,  டெல்லியில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு நாடு திரும்பிய ஆஷ்டன் அகர்  ஆகியோர் ஒருநாள் அணியில் இடம் பெற்றுள்ளனர். கம்மின்ஸ் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன் இந்தியா திரும்புவார் எற எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் தொடக்க ஆட்டக்காரர் வார்னர் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் அகர் ஆகியோர் ஒருநாள் தொடருக்கு முன் ஆஸ்திரேலியா அணியில் இணைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சுற்றுப்பயணத்திற்கான ஆஸ்திரேலிய ஒருநாள் அணி விவரம்: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அபோட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லாபுசேனே, மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஜே ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க். ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

Also Read | விவேக் பெயரை தெருவுக்கு வெச்சது மாதிரி, மயில்சாமி பெயரும் வைப்பாங்களா??... மகன்கள் சொன்னது என்ன??

CRICKET, AUSTRALIA, INDIA ODI SERIES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்