‘வலைப் பயிற்சிக்கு பந்துவீச வந்தவங்களயும்’.. ‘ஏ டீமையும் வெச்சு’.. ‘இப்படி பங்கம் பண்ணிட்டு போய்ட்டாங்களே இந்தியர்கள் அய்யகோ’! - புலம்பித் தள்ளிய ஆஸி வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய மண்ணிலேயே வைத்து பார்டர்-கவாஸ்கர் டிராபியை 2வது முறையாக இந்தியா கைப்பற்றியது குறித்து பேசிய முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆஸ்திரேலிய அணியை கடுமையாக சாடியுள்ளார்.
அடிலெய்ட் டெஸ்ட்டில் 36க்கு ஆல் அவுட் என்கிற தகவலை அறிந்தவுடனேயே பாண்டிங் உட்பட அனைவருமே இந்திய அணியை ஊற்றி மூடினர். 4-0 என்று ஒருபக்கம் பேசத் தொடங்கினர். இன்னொரு புறம் ஒயிட் வாஷ் என்றே பேசத் தொடங்கிவிட்டனர். ஊஹூம். இது மைண்ட் கேம். இந்தியாவால் முடியாது என்றனர்.
ஆனால் உண்மையில் மைன்ட் கேம் ஆடிப் பழக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணிக்கு தான், இப்போது தங்கள் மைதானத்தின் கேம் மறந்து விட்டது என்பதற்கு சான்றாகியுள்ளது ஆஸ்திரேலியாவின் இந்த அபார தோல்வி. தங்கள் அணியில் இருக்கும் பயிற்சி போதவில்லையே, ‘இன்னும் பயிற்சி வேண்டுமோ?’ என தங்கள் அணியின் கோளாறுகளைப் பற்றிப் பேசாமல் தவிர்த்து வந்தனர். புஜாரா இப்படி அறுவை போடக்கூடாது, ரன்களை வேகமாக எடுக்க வேண்டும் என்றெல்லாம் ஏகத்துக்கும் பேசிய, ஏசிய பாண்டிங் இப்போது புலம்பத் தொடங்கியுள்ளார். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என உலக அளவில் இருக்கும் இந்திய கிரிக்கெட் ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுபற்றி புலம்பியத் தள்ளிய ரிக்கி பாண்டிங், “கேப்டன் விராட் கோலியோ முதல் டெஸ்ட்டுடன் இந்தியா திரும்ப, அஸ்வின், புஜாரா, ஜடேஜா, விஹாரி என வீரர்களும், பவுலர்களும் காயமடைந்து விட, மொத்தமாக இந்திய அணியில் 20 வீரர்கள் களமிறங்கினர். சொல்லப் போனால் களமிறங்கிய வீரர்கள் இந்திய அணிக்குள் இறங்கிய இந்திய அணியின் ஏ டீம். ஆம், இந்திய அணி, இந்திய அணியின் ஏ டீமைத்தான் இந்திய அணிக்குள் லாவகமாக களமிறக்கியது. அதே சமயம் சொந்த மண்ணிலேயே ஆஸியால் இந்திய அணியை வீழ்த்த முடியவில்லை என்பது அதிர்ச்சி தான்.
ஸ்மித், வார்னர் ஆகியோர் இல்லாமலே 2018-19 தொடரில் இந்தியா வென்றது. ஆனால் முழு பலத்துடன் ஆஸ்திரேலியா இந்த முறை களமிறங்கியது. அதனாலேயே இந்த தோல்வி ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது. இப்படி ஏ டீமை வைத்தும், வலைப் பயிற்சியில் பந்து வீச அழைத்து வந்தவர்களை வைத்தெல்லாம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரானதொரு கடினமான தொடரையே வென்று விட்டார்களே இந்த இந்தியர்கள்!. அத்தனை பலவீனமாகவா இத்தனை ஸ்திறமான ஆஸ்திரேலிய அணி போய் விட்டோம். இந்திய ஏ டீமை விடவும் நாம் மோசமாகிவிட்டோமே?
இப்படி இளம் ரத்தங்களை வைத்து ஆஸி மண்ணிலேயே வைத்து இப்படி இரு தொடரை வெல்லும் அசாத்திய திறமை இந்தியர்களிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியாவின் கோட்டையான பிரிஸ்பனிலேயே வென்றிருக்கிறார்கள். நாம் இப்படி நடக்க விட்டிருக்கவே கூடாது” என்று பேசினார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அடிபட்ட இடத்துல முத்தம் கொடுப்பேன்...' 'அப்பாவுக்கு உடனே சரியாயிடும்...' - புஜாரா மகளின் நெகிழ வைக்கும் அன்பு...!
- ‘அப்போ கண்ணீர் விட்டு அழுதேன்’.. நெறைய ‘ப்ளான்’ வச்சிருந்தோம்.. ‘ஆனா...!’ இந்திய வீரர் உருக்கம்..!
- 'இன்ஸ்டாவில் உருகிய நடராஜன்'... 'அதுல இப்படி ஒரு ரிப்ளை வரும்ன்னு யாரும் நினைக்கல'... வைரலாகும் 'இன்ஸ்டா' பதிவு!
- 'என் முகத்துல முட்டைய தூக்கி வீசிட்டாங்க...' 'அதுக்காக எனக்கு ஃபீலிங்லாம் இல்ல...' - இப்படி சொல்றதுக்கு காரணம் 'இவரு' தான்...!
- “நீ நார்மலாவே ஆடு.. நான் இத பண்றேன்!”.. ‘ஆஸி மண்ணில் இந்தியாவின் வரலாற்று வெற்றி!’.. மைதானத்தில் நடந்த சீக்ரெட் திட்டங்களை போட்டு உடைத்த ரஹானே!
- ‘எங்களையா வம்புக்கு இழுத்தீங்க’!.. நேரம் பார்த்து வச்சு செஞ்ச அஸ்வின்.. அதுல ‘ஹைலைட்டே’ அந்த ஒரு ட்வீட் தான்..!
- “இந்திய அணியை குறைச்சு எடை போட்ரக் கூடாது! கத்துக்கிட்டோம்!”.. “வெறும் 11 பேர்னு நெனைச்சோம்.. ஆனா அவங்க அத்தனை கோடி இந்தியர்கள்!” - இவரே சொல்லிட்டாரா? ஆஸி மண்ணில் இப்படி ஒரு ‘கெத்தான’ பாராட்டு!
- 'இப்படி ஒரு சாதனையா?'... 'காபா'வை சல்லி சல்லியா நொறுக்கிய இந்திய இளம் படை'... விழிபிதுங்கிய ஆஸ்திரேலியா!
- ‘கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க’!.. கப்பாவுக்கு வந்தே ‘கப்’பை அடிச்சிட்டோம்.. ஆஸ்திரேலிய கேப்டனை வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!
- ‘ஸ்மித், வார்னர், டிம் பெய்ன் இருந்தும்.. டெஸ்ட் மேட்சையே ஒன் டே மேட்சா மாத்திட்டீயே பங்கு!’.. மிரட்டிய ரிஷப் பந்த்.. சந்தோஷத்தில் கங்குலியின் ‘அதிரடி’ அறிவிப்பு!